டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடியுடன் சுந்தர் பிச்சை பேச்சு.. இந்தியாவில் கூகுள் ரூ. 75,000 கோடி முதலீடு.. செம பிளான்!

Google Oneindia Tamil News

டெல்லி: ''கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையும் நானும் உரையாடினோம். மிகவும் ஆக்கபூர்வமாக இருந்தது'' என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதேசமயம் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 75,000 கோடி அளவிற்கு முதலீடு செய்வதற்கு கூகுள் நிறுவனம் தயாராக இருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Google Sundar Pichai Announced a 75,000 crores | India’s Digital Economy

    இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் பிரதமர் மோடி, ''கொரோனா தாக்கம் முதல் இந்திய விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர், தொழில்நுட்பம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று காலை நானும், கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையும் உரையாடினோம்.'' என்று பதிவிட்டுள்ளார்.

    Google CEO Sundar Pichai announced a 75,000 crores dollar Digitization Fund to help accelerate India’s digital economy

    உரையாடலின்போது டேட்டா பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு குறித்தும் பேசினோம். அப்போது கல்வி, கற்பித்தல், டிஜிட்டல் மயமாக்களில் கூகுளின் வியத்தகு முயற்சிகள் குறித்து வியப்படைந்தேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

    இன்று ஆறாவது ஆண்டாக ''கூகுள் பார் இண்டியா'' என்ற தலைப்பில் நடந்து வரும் கூட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் கலந்து கொண்டார்.

    Google CEO Sundar Pichai announced a 75,000 crores dollar Digitization Fund to help accelerate India’s digital economy

    இந்தக் கூட்டத்தில் பிரதமருடன் உரையாடிய பின்னர் பதிவிட்டு இருக்கும் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, ''இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ. 75,000 கோடி அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்யப்படும்.

    Google CEO Sundar Pichai announced a 75,000 crores dollar Digitization Fund to help accelerate India’s digital economy

    இந்த திட்டத்தின் கீழ் இந்தி, தமிழ், பஞ்சாப் என்று அனைத்து இந்திய மொழிகளிலும் மக்களுக்கு டிஜிட்டல் வழியாக தகவல் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் இணையதள வசதி கிடைக்க வேண்டும். இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப புதிய டிஜிட்டல் தயாரிப்புகளை ஏற்படுத்துதல், சேவைகளை அறிமுகம் செய்வது, வர்த்தக நிறுவனங்களுக்கு தொழிலில் டிஜிட்டல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது, சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகியவற்றில் தொழிநுட்பம் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும்'' என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    Google CEO Sundar Pichai announced a 75,000 crores dollar Digitization Fund to help accelerate India’s digital economy

    தற்போது இந்தியா மட்டும் இல்லாமல் உலக நாடுகள் பெரிய சாவல்களை சுகாதாரம், பொருளாதாராம் ஆகியவற்றில் சந்தித்து வருகிறது. இந்த சவால்களில் இருந்துதான் புதிய கண்டுபிடிப்புகளை நாம் கண்டறிய வேண்டும். இந்த புதிய கண்டுபிடிப்புகள் மூலம் இந்தியா சிறந்த வழிகாட்டியாக உலக நாடுகளுக்கு இருக்கும். நாம் ஒன்றிணைந்து உழைத்தால் சிறந்த நாட்கள் நம்மை எதிர்நோக்கி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை'' என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

    முதலமைச்சருக்கு 'பால் ஹாரிஸ் ஃபெல்லோ' விருது... கட்சியினர் வாழ்த்துமழையால் கரைபுரளும் உற்சாகம் முதலமைச்சருக்கு 'பால் ஹாரிஸ் ஃபெல்லோ' விருது... கட்சியினர் வாழ்த்துமழையால் கரைபுரளும் உற்சாகம்

    English summary
    Google CEO Sundar Pichai announced a 75,000 crores Digitization Fund to help accelerate India’s digital economy
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X