டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து 2 "இந்திய" ஆப்களை ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கிய கூகுள்.. பெரும் பரபரப்பு.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்தடுத்து இந்தியாவை சேர்ந்த இரண்டு செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கி உள்ளது. இதனால் கூகுளுக்கு எதிராக இந்தியர்கள் பலர் டிவிட்டரில் பொங்க தொடங்கி உள்ளனர்.

Recommended Video

    Remove China Apps-ஐ Play Store-லிருந்து நீக்கிய Google

    தற்போது இணையத்தில் சீனாவிற்கு எதிராக தீவிரமாக பிரச்சனை செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று இந்தியர்கள் மூலம் டிவிட்டரில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் சீனாவின் ஆண்ட்ராய்டு செயலிகளை, ஆன்லைன் சாதனங்களை நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இதற்காக உருவாக்கப்பட்ட ஆப்தான் ரிமூவ் சீனா ஆப்ஸ் (Remove China Apps) செயலி ஆகும்.

    தீவிரமான நிசார்கா புயல்.. தமிழகத்திற்கு இன்று காத்திருக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும்? தீவிரமான நிசார்கா புயல்.. தமிழகத்திற்கு இன்று காத்திருக்கும் மழை.. எங்கெல்லாம் பெய்யும்?

    என்ன செயலி

    என்ன செயலி

    இந்தியாவை சேர்ந்த OneTouch AppLabs என்ற நிறுவனம் மூலம் ரிமூவ் சீனா ஆப்ஸ் (Remove China Apps) செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி உங்கள் மொபைலில் இருக்கும் சீனாவின் செயலியை கண்டுபிடிக்கும் திறன் கொண்டது. சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட செயலிகளை இது எளிதாக கண்டுபிடித்து உங்களிடம் பட்டியலிடும்.

    சீனாவிற்கு குறி

    சீனாவிற்கு குறி

    உதாரணமாக டிக்டாக் செயலி உங்களிடம் இருந்தால், இந்த ரிமூவ் சீனா ஆப்ஸ் (Remove China Apps) அதை நீக்கும்படி உங்களிடம் கூறும். இதன் மூலம் உங்கள் மொபைலில் இருந்து சீனாவின் செயலிகளை எளிதாக நீக்க முடியும். கடந்த மே 17ம் தேதிதான் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதை 10 லட்சம் பேர் டவுன்லோட் செய்து இருக்கிறார்கள்.

    நீக்கியது

    நீக்கியது

    இந்த நிலையில் இந்த செயலியை தற்போது கூகுள் தனது பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து நீக்கியுள்ளது. இந்த செயலி கூகுள் விதிகளை மீறுகிறது. குறிப்பிட்ட நாட்டை குறிவைத்தும், வெறுப்பை பரப்பும் வகையிலும் இந்த செயலி உள்ளது. அதேபோல் இந்த செயலியில் கூகுள் அனுமதி இன்றி நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.இதனால் இந்த செயலியை நீக்குகிறோம் என்று கூகுள் கூறியுள்ளது.

    மித்ரோன் செயலி

    மித்ரோன் செயலி

    அதேபோல் பிளே ஸ்டோரில் இருந்து மித்ரோன் என்ற செயலியும் நீக்கப்பட்டுள்ளது. இது டிக்டாக் போலவே செயல்படும் இந்திய செயலி ஆகும். அப்படியே டிக்டாக் கோடிங்கை வைத்து இது உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த செயலி காப்பி அடிக்கப்பட்டதாக கூறி மொத்தமாக கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்து இந்தியாவை சேர்ந்த இரண்டு செயலிகளை ப்ளே ஸ்டோரிலிருந்து கூகுள் நீக்கி உள்ளது.

    English summary
    Google removed "Remove China App" and "Mitron" app from play store for not following guidelines.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X