டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்க பெயரிலேயே வந்தாலும்.. இ மெயிலை அவசரப்பட்டு ஓபன் செய்யாதீங்க.. கூகுள் வார்னிங்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: வாட்ஸ்அப் செயலியில், இஸ்ரேலிய மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் இருந்து சுமார் 500 பயனர்கள் உட்பட உலகளாவிய அளவில் 12,000 கூகுள் பயனாளர்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியே வந்துள்ளது.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதங்களுக்கு நடுவே, இதுபோன்ற தகவல் திருட்டு நடந்துள்ளது. இந்த தகவலை, கூகுளின், அச்சுறுத்தல் பகுப்பாய்வுக் குழுவின் (TAG) ஷேன் ஹன்ட்லி ஒரு வலைப்பதிவில் கூறியுள்ளார்.

Google warned Indians over hacking

ஏமாற்றப்பட்ட பயனர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இமெயில்கள் வழியாக பாதிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, உண்மையான கூகுள் நிறுவனத்திலிருந்து வருவது போன்ற மின்னஞ்சலை மோசடியாளர்கள் அனுப்புகிறார்கள். என்ன ஒன்று.. கூகுள் என்பதற்கு பதில், Goolge என்று இருக்கும். அல்லது இதேபோன்ற சிறு வேறுபாடு இருக்கும். இதை இமெயில் ரிசீவ் செய்பவர்கள் உன்னிப்பாக கவனிப்பதில்லை.

Google warned Indians over hacking

இமெயில் பயனர், அதில் வரும், இணைப்பைக் கிளிக் செய்ததும், அவர்களின் கடவுச்சொல் உள்ளிட்ட பல விவரங்களை உள்ளிடுவார். அப்போது பயனாளியின் முழு விவரம் திருடப்படும். பணம் அபேஸ் செய்யப்படும். பெரும்பாலும் உங்கள் அக்கவுண்டுக்கு ஆபத்து, என செக்யூரிட்டி அலர்ட் வடிவத்தில்தான் இந்த மோசடி லிங்க்குகள் அனுப்பப்படுகிறது.

சுவிட்ச் ஆப் மோடில் அஜித் பவாரின் செல்போன்.. என்சிபி தகவல்.. அப்போ மீண்டும் மொதல்ல இருந்தா?சுவிட்ச் ஆப் மோடில் அஜித் பவாரின் செல்போன்.. என்சிபி தகவல்.. அப்போ மீண்டும் மொதல்ல இருந்தா?

இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நாட்டின், சைபர் தாக்குதல்கள் தொடர்பாக மக்களவையில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சஞ்சய் தோத்ரே, "இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (சிஇஆர்டி-இன்) அறிக்கை மற்றும் கண்காணித்த தகவல்களின்படி, 2016ல் 50,362, 2017ல், 53.117, 2018ம் ஆண்டில், 208.456 சைபர் அட்டாக் வழக்குகள் பதிவாகியுள்ளன" என்று கூறியிருந்தார்.

English summary
Google said on Tuesday that about 500 users from India were among 12,000 people informed about being targeted by ‘government-backed attackers’ between July and September this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X