டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் பாதிப்பு.. இந்திய பள்ளிகளுக்கு மத்திய அரசு முக்கிய சுற்றறிக்கை!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் பள்ளிகளில் மாணவர்களை பெரிய அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பள்ளிகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Recommended Video

    Corona Virus Symptoms | Precautions

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது வரை 29 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஒருவர், ஆக்ராவில் 6 பேர், தெலுங்கானாவில் ஒருவர், ராஜஸ்தானில் ஒரு டிரைவர், 16 இத்தாலி நாட்டவர்கள் உள்பட 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அச்சுறுத்தும் கொரோனா.,. இதுவரை இந்தியாவில் ஒன்றுதான்.. இனி வரப்போகிறது 19.. மத்திய அரசு முடிவுஅச்சுறுத்தும் கொரோனா.,. இதுவரை இந்தியாவில் ஒன்றுதான்.. இனி வரப்போகிறது 19.. மத்திய அரசு முடிவு

    கொரோனா

    கொரோனா

    இந்த நிலையில் குர்கானில் உள்ள பேடிஎம் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அண்மையில் இத்தாலி நாட்டுக்கு விடுமுறைக்காக சென்றிருந்தார் என பேடிஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.

    மோடி அறிவுறுத்தல்

    மோடி அறிவுறுத்தல்

    கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இது போல் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படமாக குறிப்பிட்டுள்ளார்.

    பாதிப்பு

    பாதிப்பு

    அவர் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டங்களிலும் ஈடுபட போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் மாணவர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கடந்த 28 நாட்களில் மாணவர்களோ பள்ளி ஊழியர்களோ கொரோனா பாதித்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

    தீவிர சோதனை

    தீவிர சோதனை

    அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். காய்ச்சல், இருமல், சளி, மூச்சுதிணறல் ஆகியவை இருந்தால் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோருக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்ய கழிப்பறைகளில் எப்போதும் சோப், தண்ணீர் இருப்பதை பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுவர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    Central Government advises all schools to avoid large gatherings of students as Corona virus intensifies in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X