டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1 முதல் தொடங்கும்.. மத்திய அரசு முக்கிய அட்டவணை

Google Oneindia Tamil News

டெல்லி: நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து கல்லூரிகள், பள்ளிகள் இயங்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளையும், கல்லூரிகளையும் நாடு முழுவதும் திறக்க அரசு அனுமதிக்கவில்லை.

அதேநேரம் ஆன்லைன் கல்விக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி கல்லூரிகளில் ஆன்லைன் கல்வி கற்பிக்கப்படுகிறது. இதேபோல் பள்ளிகளிலும் ஆன்லைன் வழியாக கல்வி கற்பிக்கப்படுகிறது.

தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பதில் தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

நுழைவு தேர்வுகள்

நுழைவு தேர்வுகள்

இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வழியாக தற்போது கல்லூரிகள் நடைபெற்று வருகிறது. கல்லூரிகளில் தற்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. மருத்துவ படிப்புக்கு அண்மையில் நீட் நுழைவு தேர்வு நடந்து முடிந்தது.இதேபோல் ஐஐடி உள்ளிட்ட பல்கலைக்கழங்களில் படிக்கவும் நுழைவு தேர்வு நடந்து முடிந்துள்ளது.

அட்டவனை வெளியீடு

அட்டவனை வெளியீடு

இந்த சூழலில் கலை அறிவியல் கல்லூரிகள் உள்பட அனைத்து விதமான கல்லூரிகளின் முதலாம் ஆண்டு வகுப்புகளை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கான வகுப்புகள் தொடங்குவதற்கான அட்டவணையை மத்திய கல்வி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அக்.31க்குள் மாணவர்சேர்க்கை

அக்.31க்குள் மாணவர்சேர்க்கை

இதன்படி அக்டோபர் 31 க்குள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வகுப்புகள் நவம்பர் 1 முதல் வகுப்புகள் தொடங்குகிறது.

தேர்வுக்கு தயாராக விடுமுறைகாலம் 1.03.2021 முதல் 07.03. 2021 வரை இருக்கும்.

செமஸ்டர் தேர்வுகள் 8.03.2021 முதல் 26.03, 2021 வரை நடைபெறும்

விடுமுறை எப்போது

விடுமுறை எப்போது

  • செமஸ்டர் தேர்வுக்கு பின்பான விடுமுறை காலம் 27.03.2021 முதல் 04.04.2021.
  • செமஸ்டர் தேர்வு விடுமுறைக்கு பின்பு வகுப்புகள் 05.04.2021 முதல் தொடங்கும்.
  • தேர்வுக்கு தயாராக விடுமுறை காலம் 01.08.2021 முதல் 08.08.2021 வரை இருக்கும்.
  • இரண்டாவது செமஸ்டர் தேர்வு 09.08.2021 முதல் 21.08,2021 வரை நடைபெறும்.
  • 2வது செமஸ்டர் விடுமுறை 22.08,2021 முதல் 29.08,2021 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அடுத்த கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் 30.8.2021 முதல் தொடங்கும்" இவ்வாறு மத்திய அரசு அட்டவணை வெளியிட்டுள்ளது.

English summary
The Central Government has announced that the first year classes in the colleges will start from November 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X