டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி எந்த விஐபிக்கும் கருப்பு பூனை படை இல்லை.. மொத்தமாக என்எஸ்ஜி விடுவிப்பு.. மத்திய அரசு அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: கருப்பு பூனை படை என்று அழைக்கப்படும் என்எஸ்ஜி கமாண்டோக்களை விஐபிக்களை பாதுகாக்கும் பணியில் இருந்து முழுமையாக நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திரா காந்தி 1984ம் ஆண்டு பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு 20 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத எதிர்ப்பு படையாக கருப்பு பூனை கமாண்டோக்கள் விஐபிகளுக்கு பாதுகாப்பு கடமையை செய்து வந்தனர்.

சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பணியில் இருந்து தங்களது இயல்பான பணியான பயங்கரவாத தடுப்பு பணியில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து என்எஸ்ஜி கமாண்டோக்கள் பணியாற்ற போகிறார்களாம்.

24 படை வீரர்கள்

24 படை வீரர்கள்

தேசிய பாதுகாப்பு படை 'அதிநவீன தாக்குதல் ஆயுதங்களை ஏந்திய கமாண்டோக்களை நாட்டில் இசட் + 'பிரிவின் கீழ் உள்ள 13' உயர்-ஆபத்து 'வி.ஐ.பி-க்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது, அவை ஒவ்வொன்றிற்கும் சுமார் 24 பணியாளர்களைக் கொண்டது. இந்த பணியினை இனி துணை ராணுவப்படை மேற்கொள்ளும் என தெரிகிறது.

ராஜ்நாத் சிங் பாதுகாப்பு

ராஜ்நாத் சிங் பாதுகாப்பு

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட என்.எஸ்.ஜி.யின் பாதுகாப்பு கடமைகள் விரைவில் துணை ராணுவப் படைகளுக்கு மாற்றப்படும் என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எல்கே அத்வானி

எல்கே அத்வானி

இதேபோல் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, முலாயம் சிங், சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் சிங் பாதல் மற்றும் பரூக் அப்துல்லா, அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், பாஜக தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல் கே அத்வானி ஆகியோரையும் இனி தேசிய பாதுகாப்பு படைக்கு பதில் துணை ராணுவமே பாதுகாக்கும்.

விஐபி பாதுகாப்பு

விஐபி பாதுகாப்பு

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் குறிப்பிட்ட பணிகளைக் கையாளுவது தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) அதன் உண்மையான பணி என்றும் அதில் தான் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதிக ஆபத்துள்ள வி.ஐ.பி-களைப் பாதுகாக்கும் பணி என்பது கூடுதல் சுமையாக மத்திய உள்துறை அமைச்சகம் "கருதுகிறது" என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு அதிகாரி

பாதுகாப்பு அதிகாரி

"என்.எஸ்.ஜி அதன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடத்தல் எதிர்ப்பு கடமைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும். இதுதான் சமீபத்திய நடவடிக்கைக்கு காரணம்" என்று பாதுகாப்பு துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் செல்வர்

நாடு முழுவதும் செல்வர்

என்.எஸ்.ஜி.யில் இருந்து வி.ஐ.பி பாதுகாப்பு கடமைகளை நீக்குவதால் சுமார் 450 கமாண்டோக்கள் விடுவிக்கப்படுவார்கள், அவர்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள ஐந்து மையங்களில் பரவியிருக்கும் பாதுகாப்பு படையில் செயல்படுவார்கள் என்றும், டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராமில் தலைமையாக கொண்டு நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
After effecting a major VIP security cut and withdrawal of SPG cover from VIP security, govt now decided to completely remove NSG commandos from this task.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X