டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டம்புள்ஸ்லாம் ரெடியா.. ஆக. 5ம் தேதி முதல் ஜிம்களை திறக்கலாம்.. இந்த ரூல்ஸை மறக்காம கடைப்பிடிக்கணும்!

Google Oneindia Tamil News

டெல்லி: ஜிம் மற்றும் யோகா பயிற்சி கூடங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர் முதன் முறையாக வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இவை திறக்கப்பட இருக்கின்றன. கொரோனா பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் பயிற்சி நிலையங்களை தவிர மற்றவை மட்டுமே திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி செய்வது கடினம். ஒவ்வொருவருக்கும் இடையே ஆறடி இடைவெளி இருக்க வேண்டும். பயிற்சி கூடங்களில் இருக்கும்போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், முகத்தை மூடுவதைப் போன்ற visor அணிந்து கொள்ள வேண்டும். அல்லது மாஸ்க் அணிய வேண்டும். எண் 95 மாஸ்க் அணியும்போது, பயிற்சி செய்தால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

Government has issued new guidelines to reopen gyms, yoga centre on August 5th

பயிற்சி கூடங்களில் இருதயத்தை வலுப்படுத்தும் இயந்திரங்கள் இருக்க வேண்டும். ஏர் கன்டிஷன் செய்யப்பட்டு இருந்தால், 24-30ºC என்ற அளவில் குளிர்ச்சி இருக்க வேண்டும். ஈரப்பதம் 40-70% என்ற அளவில் இருக்க வேண்டும். பயிற்சி கூடங்கள் காற்றோட்டம் மிக்கதாக இருக்க வேண்டும். அவ்வப்போது புதிய காற்று வந்து செல்வது போன்று இருக்க வேண்டும்.

ஸ்பா, ஸ்டீம் பாத் எடுக்கும் அறைகள், நீச்சல் குளம் ஆகியவற்றுக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பயிற்சி கூடங்களில் ஒவ்வொரு முறையும் 15-30 நிமிடம் இடைவெளி விட்டு சந்திப்பு மேற்கொள்ள வேண்டும். பயிற்சி கூடங்களில் அனைவரும் ஒரே 'மேட்' பயன்படுத்துவதை தவிர்த்து, பயிற்சிக்கு வருபவர்கள் ஓவ்வொருவரும் தனித்தனியாக மேட் கொண்டு வரவேண்டும்.

டெஸ்டிங் எல்லாம் ஓகே.. இதில்தான் பின்தங்கிவிட்டோம்.. மோசமாகும் கொரோனா டெஸ்டிங் எல்லாம் ஓகே.. இதில்தான் பின்தங்கிவிட்டோம்.. மோசமாகும் கொரோனா "டிடிபி ரேட்".. ஷாக் டேட்டா!

சிறிய சத்தத்தில் பாடல்கள், இசையை ஒளிபரப்பலாம். யோகா கூடங்களில் சத்தம் எழுப்புவது, சிரிப்பது போன்ற பயிற்சிகளில் ஈடுபடக் கூடாது. அனைத்து கூடங்களிலும் உள்ளேயும், வெளியேயும் கிருமி நாசினிகளை அடிக்கடி தெளிக்க வேண்டும்.

வேறு நோய்கள் இருப்பவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழானவர்கள் பயிற்சி கூடங்களில் வந்து பயிற்சி மேற்கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பயிற்சி கூடங்களுக்கு வருபவர்கள் ஆரோக்கிய சேது ஆப்பை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற தளர்வுகளை அன்லாக் 3.0ல் மத்திய அரசு அறிவித்துள்ளது.

English summary
Government has issued new guidelines to reopen gyms, yoga centre on August 5th
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X