டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"வணிகத்தில் எந்த வியாபார எண்ணமும் இல்லை" - தனியார்மயமாக்கல் குறித்து பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: அரசாங்கத்திற்கு "வணிகத்தில் எந்த வியாபார எண்ணமும் இல்லை" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறை (டிஐபிஏஎம்) தனியார்மயமாக்கல் குறித்த ஒரு வெபினாரில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அதில், நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு துணை நிற்பது அரசாங்கத்தின் கடமையாகும், ஆனால் அதற்காக நிறுவனங்களை சொந்தமாக வைத்து நடத்த வேண்டும் என்பது அவசியமில்லை. அரசாங்கத்திற்கு "வணிகத்தில் எந்த வியாபார எண்ணமும் இல்லை". பொதுத்துறை நிறுவனங்கள் நிறுவப்பட்டபோது இருந்த காலம் வேறு. அப்போது இருந்த தேவைகளும் வேறு.

Government has no business to be in business PM Modi about privatisation plans

50-60 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக இருந்த கொள்கையை சீர்திருத்த எப்போதும் வாய்ப்புள்ளது. இப்போது நாம் சீர்திருத்தத்தைக் கொண்டு வரும்போது, மக்களின் பணத்தை உகந்த முறையில் பயன்படுத்துவதே எங்கள் நோக்கம்.

பொதுத் துறை நிறுவனங்கள் இவ்வளவு காலமாக செயல்பட்டு வருகிறது என்ற காரணத்திற்காக அவற்றைத் தொடர முடியாது. அரசாங்கத்தின் கவனம் சமூகத்தின் நலன் மற்றும் மக்கள் தொடர்பான கொள்கைகளில் இருக்க வேண்டும். அரசாங்கம் பல பயன்படுத்தப்படாத சொத்துக்களைக் கொண்டுள்ளது. இதுபோன்ற 100 சொத்துக்கள் ரூ 2.5 லட்சம் கோடியைப் பெறுவதற்காக பணமாக்கப்படும் என்று மோடி கூறினார்.

மேலும், "எங்கள் கவனம் பணமாக்குவதும் பின்னர் நவீனமயமாக்குவதும் ஆகும். தனியார் துறை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு வருகிறது, மேலாண்மை மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, திறமையான வேலைகளை உருவாக்குகிறது. இது அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும்.

பாதுகாப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய துறைகளில் குறைந்தபட்ச தொழில்களைத் தவிர அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்க தனது நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது" என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

English summary
Government has 'no business to be in business PM Modi about privatisation plans
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X