டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவுக்கு எதிரான போர்.. மாநில அரசுகளுக்கு ரூ.15,000 கோடி பேக்கேஜ்.. மத்திய அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்த மத்திய அரசு இன்று ரூ .15,000 கோடி பேக்கேஜை அளித்துள்ளது.

Recommended Video

    Odisha Lockdown extension | நாட்டிலேயே முதல் மாநிலம்.. லாக்டவுனை நீட்டித்தது ஒடிசா அரசு

    கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, மொத்த நிதியில், ரூ.7,774 கோடி, அவசர கால சேவைக்கும், மீதமுள்ள தொகை நடுத்தர கால ஆதரவுக்கும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    Government sanctions Rs 15,000 crore to strengthen Indias covid fight

    ஏற்கனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாநிலங்களுக்கு ரூ.21 ஆயிரம் கோடியை முதல்கட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.

    இதையடுத்துதான், தற்போது கூடுதலாக ரூ. 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ள போதிலும், மாநிலங்களுக்கு இந்த தொகை 3 தவணைகளாக பிரித்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் விஸ்வரூபமெடுத்த கொரோனா- ஒரேநாளில் 287 பேருக்கு பாதிப்பு சிங்கப்பூரில் விஸ்வரூபமெடுத்த கொரோனா- ஒரேநாளில் 287 பேருக்கு பாதிப்பு

    கோவிட் -19 லாக்டவுனால் கடுமையாக பாதிக்கப்படுபவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்கும் வகையில் ரூ .1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரணப் பேக்கேஜை மார்ச் 27ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    அதன் மூலம், சுமார் 800 மில்லியன் மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு நேரடி பரிவர்த்தனை மூலம் பணம் மற்றும் இலவச உணவு தானியங்கள் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்கும்.

    English summary
    The centre today sanctioned Rs 15,000 crore package to strengthen India's fight against the novel coronavirus. The funds allocated will be utilized for immediate COVID-19 Emergency Response (amount of Rs 7774 crores) and rest for medium-term support (1-4 years) to be provided under mission mode approach, read a press statement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X