டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா?.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ. 2021 கோடி செலவு செய்யப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது வெளிநாடு பயணம் செய்வதும் அங்குள்ளவர்களுடன் செல்பி எடுக்கவுமே நேரம் சரியாக இருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால் ஆளும் கட்சியோ பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களால் அன்னிய நேரடி முதலீடுகள் உயர்ந்துள்ளதாக பெருமிதம் கொள்கின்றனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கான செலவுகள் எவ்வளவு என்பது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி கே சிங் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 48 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதில் 55 நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இத்தனை கோடி

இத்தனை கோடி

அவற்றில் பல நாடுகளுக்கு அதிக முறை போயுள்ளார். கடந்த 2014-15-ஆம் ஆண்டு விமான பயணச் செலவு மட்டும் ரூ. 93. 76 கோடியாக இருந்தது. அதே 2015-16-ஆம் ஆண்டு 117.89 கோடியானது. 2016-17-இல் ரூ.76. 27 கோடியானது. 2017-2018-ஆம் ஆண்டு ரூ. 99.32 கோடியாக உள்ளது.

அன்னிய நேரடி முதலீடுகள்

அன்னிய நேரடி முதலீடுகள்

2018- முதல் டிசம்பர் 3-ஆம் ஆண்டு வரை மோடி வெளிநாடு செல்ல விமான செலவு மட்டும் ரூ. 42.01 கோடியாகியுள்ளது. மோடி சென்ற வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் இந்தியாவுக்கு அதிகளவிலான அன்னிய நேரடி முதலீடுகள் பெறப்படுகின்றன. அதாவது 30,930.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அன்னிய நேரடி முதலீடுகள் 43,478.27 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்தன.

குறிப்பு இல்லை

குறிப்பு இல்லை

விமான செலவு, விமானங்களை பராமரித்தல் கட்டணம், அவசர தொலைபேசி கட்டணம் என பிரதமர் மோடிக்கு ரூ. 2021 கோடி ஆகியுள்ளது என்றார். எனினும் அவசர தொலைத்தொடர்புக்காக மோடிக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பதை வி கே சிங் குறிப்பிடவில்லை.

எத்தனை கோடி

எத்தனை கோடி

இதே போல் 2009-2014 மற்றும் 2013-14 வரை மன்மோகன் சிங்கின் வெளிநாடு பயணங்களுக்கு ரூ. 1,346கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுபோல் விமான செலவு, விமானங்களை பராமரித்தல் கட்டணம், அவசர தொலைபேசி கட்டணம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ரூ, 1.346 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

English summary
An expenditure of over Rs 2,021 crore was incurred on chartered flights, maintenance of aircraft and hotline facilities during Prime Minister Narendra Modi’s visits to foreign countries since June 2014, according to the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X