டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆதரிக்கும் மாநிலங்கள்.. லாக்டவுனை ஏப்.14ம் தேதிக்கு பிறகு நீடிக்கலாமா.. மத்திய அரசு யோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் எனில் லாக்டவுனை நீடிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இதனால் லாக்டவுனை நீடிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் ஒன் இந்தியாவிடம் தெரிவித்தன.

தெலுங்கானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், அசாம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் 21 நாள் லாக்டவுன் முடிந்த பின்னரும் சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று சுட்டிக்காட்டி உள்ளன.

நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா வைரஸ் அதிக அளவு பரவி உள்ளது. மும்பை மற்றும் புனேவில் மிக அதிகமான அளவு கொரோனா பாதிப்பு உள்ளதால் அந்த பகுதிகளில் லாக்டவுன் நீடிக்கப்பபட வாய்ப்பு உள்ளது.

எம்.பி. நிதியை ரத்து செய்வதா? தமிழகத்துக்கு ரூ. 510 கோடிதானா? கொரோனா அரசியல்தான்.. ஸ்டாலின் எம்.பி. நிதியை ரத்து செய்வதா? தமிழகத்துக்கு ரூ. 510 கோடிதானா? கொரோனா அரசியல்தான்.. ஸ்டாலின்

மும்பை புனே

மும்பை புனே

அதேபோல் மகாராஷ்டிராவில் கொரோனா அதிகம் பரவும் ஹாட்ஸ்பாட்களிலும் லாக்டவுன் தொடர்ந்து நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை மற்றும் புனேவில் அதிகம் பேருக்கு கொரோனா பரவி உள்ளதாக மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார். ஏப்ரல் 14 க்குப் பிறகு லாக்டவுன் முற்றிலுமாக அகற்றப்படும் என்று யாரும் கருதக்கூடாது என்று அண்மையில் விளக்கம் அளித்தார.

சத்தீஸ்கர் எதிர்ப்பு

சத்தீஸ்கர் எதிர்ப்பு

அசாமில் இதுவரை 26 பேருக்கு கொரோனா பரவி உள்ள நிலையில் , லாக்டவுன் முடிந்த பின்னரும் அந்த மாநிலத்திற்குள் நுழைய விரும்புவோரை ஒழுங்குபடுத்துவதற்கான பதிவு முறையை அறிமுகப்படுத்த திட்டங்களை வைத்துள்ளது. உத்தரபிரதேசத்திலும் லாக்டவுன் நீடிக்கப்படுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லையை திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

தடுமாறும் ராஜஸ்தான்

தடுமாறும் ராஜஸ்தான்

லாக்டவுனை நீடிப்பதா வேண்டாமா என்று ராஜஸ்தானும் தடுமாற்றத்தில் உள்ளது. ராஜஸ்தானில் குறிப்பிட்ட பகுதியில் லாக்டவுனை நீடிக்கலாமா இருப்பது என்பது பற்றி திட்டமிட குழு அமைத்துள்ளது. . அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு சீல் வைப்பதற்காக இந்த குழு ஆராய்ந்து வருகிறது. தமிழகத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பது குறித்து உறுதியாக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. அதேநேரம் லாக்டவுன் நீடிக்கப்படாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை என்கிற சூழலே நிலவுகிறது.

கேசிஆர் ஆதரவு

கேசிஆர் ஆதரவு

தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் திங்களன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த லாக்டவுனை தவிர வேறு எந்த ஆயுதமும் நம்மிடம் இல்லை. ஒரு வருடம் கழித்து நமது பொருளாதாரம் மீட்கப்படலாம், ஆனால் உயிர்களை இழந்தால் அவற்றை மீண்டும் கொண்டு வர முடியாது என்று அவர் கூறினார்.

மத்திய அரசு என்ன திட்டம்

மத்திய அரசு என்ன திட்டம்

இதனிடையே நாடு முழுவதும் லாக்டவுனை நீடிப்பது குறித்து இன்னும் அரசு முடிவெடுக்கவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். அரசு எடுத்து வரும் கண்டெய்ன்மென்ட் திட்டங்கள் மூலம் பலன் கிடைத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

English summary
Government sources tell OneIndia that government is thinking about extension of lockdown, following request by states
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X