டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிதி மோசடியாளர்களுக்கு எப்படி பொருந்தும்.. கடன் நீக்க விவகாரம் குறித்து ப சிதம்பரம் கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: கடன் வாங்கிவிட்டு மோசடி செய்து வெளிநாடு தப்பிய மோசடியாளர்களின் விவரங்களை கணக்கு புத்தகங்களில் இருந்து நீக்குவது எப்படி பொருந்தும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    அதிர்ச்சி..! 50 தொழில் அதிபர்களின் ரூ.68,000 கோடி கடன் தள்ளுபடி!

    இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " வங்கிக் கடனை வேண்டுமென்றே நீண்ட காலத்திற்கு திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தவர்களின் விவரங்களை கணக்கு புத்தகங்களிலிருந்து நீக்குவதும், அவர்களின் கடனை வசூலிப்பதற்குமான நடைமுறையை தொடரலாம். இதை யாரும் மறுப்பதற்கில்லை.

    government to explain why it had taken the technical loan write-off route for fugitives : PC

    ஆனால், வெளிநாடு தப்பியவர்கள், நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாக இருப்பவர்கள். அப்படிப்பட்ட நிதி மோசடியாளர்களின் கணக்ககுளையும் நீக்கியிருப்பது ஏன்? நீரவ் மோடி, மெகுல் சோக்சி, மல்லையா போன்ற வெளிநாடு தப்பியவர்களுக்கு இந்த வழிமுறையை முன்னெடுப்பது ஏன்? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். தலைமறைவு நிதி மோசடியாளர்களின் கடன் கணக்கு விவரங்களை நீக்குவதில் இந்த விதி பொருந்தாது என்பது என் கருத்து.

    நீட் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு நீட் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

    கொரோனாவால் தேசிய அளவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு விரைவில் முடிய உள்ளதால், அதன் பிறகான நடவடிக்கைகள் குறித்த திட்டங்களை வகுத்து மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தொழிலாளர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பள பாதுகாப்பிற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே அதுபோன்ற நிலையை தவிர்க்க தொழில் நிறுவனங்களுக்கான பிரதமர் அடுத்த சில நாட்களில் நிதி உதவி அறிவிக்க வேண்டும்" என்றார்.

    English summary
    Senior Congress leader P Chidambaram asked the government to explain why it had taken the technical loan write-off route for fugitives like Nirav Modi, Mehul Choksi and Vijay Mallya.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X