டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் பாதை.. ரயில்வே அமைச்சர் பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் என லோக்சபாவில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார்.

சென்னையில் தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கமாக ஒரு ரயில் பாதையும், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் வழியாக இன்னொரு பாதையும், ராயபுரம், பொன்னேரி, தடா என மூன்றாவது பாதையும் உள்ளது. இதுதவிர சென்னை நகருக்குள் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் பாதையும் உள்ளது.

 Govt check IF Possibilities of Railway line between Avadi - Sriperumbudur - Guduvancheri, says railway minister piyush goyal

இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளான ஆவடி, கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூரை இணைக்கும் வகையில் சாலைகள் உள்ள போதிலும் ரயில் பாதைகள் இல்லை.இந்த பகுதிகளில் தான் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் உள்ளன. தற்போது செங்கல்பட்டில்இருந்து ஆவடி செல்ல வேண்டும் என்றால் சென்னை வந்து தான் செல்ல வேண்டும். ஸ்ரீபெரும்புதூருக்கு ரயில் பாதை என்பதே கிடையாது.

இதுதொடர்பாக திமுக குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்பியுமான டி.ஆர். பாலு லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். அதில், சிறிய ரயில் வழித்தடமான ஆவடி ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையே ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து வரும் பயணிகளுக்கு போக்குவரத்து நெரிசல் என தெரிவித்தார்.

பார்க்க விடாமல் தடுத்த மாமியார் பச்சையம்மாள்.. தலைக்கேறிய கோபம்.. பிளேடால் வெட்டிய ரஞ்சித் பார்க்க விடாமல் தடுத்த மாமியார் பச்சையம்மாள்.. தலைக்கேறிய கோபம்.. பிளேடால் வெட்டிய ரஞ்சித்

அதற்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துப் பேசும் போது நாடு முழுவதும் பல ரிமோட் பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதிகளுக்கு ரயில் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட வேண்டி உள்ளது. உறுப்பினர் (டி.ஆர். பாலு) எழுப்பிய கோரிக்கை குறித்து ஆராயப்படும். சாத்திக்கூறுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டால் இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என்று விளக்கம் அளித்தார்..

English summary
railway minister piyush goyal said that Govt will check IF Possibilities of Railway line between Avadi - Sriperumbudur - Guduvancheri on lok sabha after tr baalu question
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X