• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சீனாவை குறிவைத்து அடிக்கும் இந்தியா.. லேப்டாப், கேமரா, ஜவுளிகளுக்கு சுங்க வரி உயருகிறது!

|

டெல்லி: சீனாவிலிருந்து இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லேப்டாப்கள் கேமராக்கள், ஜவுளி மற்றும் அலுமினிய பொருட்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மீது சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்

முன்னதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் முன்மொழிவை நிதி அமைச்சகம் நிராகரித்திருந்த நிலையில் இப்போது நிதியமைச்சகம் பரிசீலித்து வருவதாக மத்திய அரசுவட்டாரங்கள் தெரிவித்தன. சில கட்டண உயர்வை அறிவிப்பதன் மூலம் வருவாய் துறை முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

  China product- க்கு பதிலா patanjali.. IPL- ஐ குறிவைக்கும் பாபா ராம்தேவ்

  மற்றொரு அதிகாரி இதுபற்றி கூறுகையில். "இது சீனாவிற்கு எதிரானநடவடிக்கை அல்ல, ஆனால் சுங்க வரியை ஒட்டுமொத்தமாக அதிகரிக்க அரசு விரும்புகிறது. இருப்பினும் சீனாவிலிருந்து பெரிய அளவில் வரும் தயாரிப்புகளில் கவனம் செலுத்தப்பட உள்ளது" என்று விளக்கினார்.

  2021-இல் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கும், திராவிட அரசியலுக்கும்தான் போட்டி.. அர்ஜூன் சம்பத் சவால்

  சுங்க வரி உயர்வு

  சுங்க வரி உயர்வு

  சமீபத்திய வாரங்களில், இந்தியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளைக் கொண்ட நாடுகளிலிருந்து, குறிப்பாக வியட்நாம் அல்லது தாய்லாந்து போன்ற ஆசிய உறுப்பு நாடுகளிடமிருந்து இறக்குமதிகள் திசைதிருப்பப்படுவதைக் கவனித்ததால், மத்திய அரசு சுங்க வரி உயர்வு குறித்து எச்சரிக்கையாகவே உள்ளது.

  ஜவுளி, லேப்டாப்

  ஜவுளி, லேப்டாப்

  வருவாய்த் துறை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதன் காரணமாக, டயர்கள் மற்றும் டிவி பெட்டிகளின் இறக்குமதி உரிமத்தை கட்டுப்படுத்த வணிகத் துறை விரும்புகிறது. லேப்டாப்கள் கேமராக்கள், ஜவுளி மற்றும் அலுமினிய பொருட்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மீது சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

  59 சீன ஆப்கள்

  59 சீன ஆப்கள்

  சில எஃகு பொருட்களை இறக்குமதி செய்ய கட்டுப்பாடு விதிப்பதற்கும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் பரிசீலித்து வருகிறதாம் இப்போது அறிவிக்க பரிலீசித்து வரும் சிலஇறக்குமதி கட்டுப்பாடுகளைத் தவிர, நரேந்திர மோடி அரசு ஏற்கனவே 59 சீன ஆப்களையும் தடை செய்துள்ளது.

  மத்திய அரசு

  மத்திய அரசு

  அத்துடன் சீனாவை தளமாகக் கொண்ட நிறுவனங்களிலிருந்து அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்.டி.ஐ) ஒப்புதல் முறைக்கு மாற்றுவதற்கு முந்தைய முறைக்கு பதிலாக நிறுவனங்கள் முதலீடு குறித்து ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், சீன ஒப்பந்ததாரர்கள், மற்றும் சீன நிறுவனங்கள் அரசாங்க ஒப்பந்தங்களில் பங்கேற்க விரும்பினால் மத்திய அரசில் பதிவு செய்யும் முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

  இந்தியாவின் அதிருப்தி

  இந்தியாவின் அதிருப்தி

  அண்மையில் லடாக்கில் சீனா ஊடுருவியதில் இந்தியாவின் அதிருப்தியை தெளிவாகக் குறிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். தனித்தனியாக, மொபைல் உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த மருந்துகளை உற்பத்தி செய்யும் மருந்து நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. மேலும் சில துறைகள் இந்த லிஸ்டில் வரும் வாரங்களில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறை

  சீனாவுடன் வர்த்தக பற்றாக்குறை

  இந்தியா சீனாவுடன் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை கொண்டுள்ளது, இது 2019-20ல் 48.7 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஐந்து ஆண்டுகளில் மிகக் குறைவு. இந்தியாவில் இருந்து அதிக ஏற்றுமதியை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சீனா இதுவரை பதிலளிக்கவில்லை என்று அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Govt is considering increasing customs duty on close to 20 product segments including laptops, cameras, textiles and aluminum goods as part of its latest move to restrict imports from China.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X