டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி.. முதல் ஆர்டராக 50 லட்சம் டோஸ்கள் வாங்க மத்திய அரசு சூப்பர் திட்டம்

Google Oneindia Tamil News

புதுடில்லி: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்காக சுமார் 50 லட்சம் டோஸ் கொரோனாதடுப்பூசியை கொள்முதல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Recommended Video

    4ல் ஒரு இந்தியருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி

    தடுப்பூசி ஒழுங்குமுறை அனுமதி கிடைத்தவுடன் இதற்கு முன்னுரிமை அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இதேபோல் மிகவும் பாதிக்கப்படக்கூடிய அபாயத்தில் உள்ளவர்களுக்கும் அரசு வழங்க விரும்புகிறது.

    மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் இதுபற்றி கூறுகையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்டோருக்காக சுமார் 50 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    Exclusive: பாஜக சர்க்கஸ் காட்டுகிறது.. ரீலுக்கும் ரியலுக்கும் வித்தியாசம் உள்ளது -பி.டி.அரசக்குமார்Exclusive: பாஜக சர்க்கஸ் காட்டுகிறது.. ரீலுக்கும் ரியலுக்கும் வித்தியாசம் உள்ளது -பி.டி.அரசக்குமார்

    பெரிய தேவை மதிப்பீடு

    பெரிய தேவை மதிப்பீடு

    உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசியை உருவாக்கப்படக்கூடும் என்பதால், உறுதிப்படுத்தப்பட்ட சந்தையின் மதிப்பீடுகளை (எவ்வளவு தேவை) அரசாங்கத்திடம் அவர்கள் கேட்கிறார்கள். நாங்கள் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பெரிய தேவை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம்.

    முக்கிய ஆலோசனை

    முக்கிய ஆலோசனை

    நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் மற்றும் சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையிலான கோவிட் தடுப்பூசி நிர்வாகம் குறித்த நிபுணர் குழு, அண்மையில் தடுப்பூசி உருவாக்கும் முக்கிய நிபுணர்களுடன் சந்தித்து பேசியது. உற்பத்தி, விலை நிர்ணயம் மற்றும் பரிந்துரைகளுக்கான திறன்கள் ஆகிய திட்டங்களை அரசிடம் விவரிக்கும்படி கேட்டுக் கொண்டது. அரசாங்கம் தடுப்பூசி குழுவிற்கு அளிக்க வேண்டிய ஆதரவு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    தடுப்பூசி உற்பத்தியாளர்கள்

    தடுப்பூசி உற்பத்தியாளர்கள்

    அப்போது தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் ஒன்றின் மூத்த நிர்வாகி பேசும் போது, " தடுப்பூசி வளர்ச்சியில் பெரிள அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் முழு திறனையும் அர்ப்பணிக்கிறோம். எனவே அரசாங்கம் விரிவான சந்தை வாய்ப்புகளை தெரிவிக்க வேண்டும் "என்றார்.

    கூட்டம் நடத்த வேண்டும்

    கூட்டம் நடத்த வேண்டும்

    அதற்கு மத்திய அரசு அதிகாரிகள், தேவைப்பட்டால், தடுப்பூசிகளை முன்கூட்டியே தயாரிப்பதற்கான நிதி உதவி உள்ளிட்ட நிபுணர் குழுவின் பல்வேறு விருப்பங்களை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். இருப்பினும், தற்போதைக்கு இந்த விவாதங்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன, மேலும் ஒரு திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்பு குழு இன்னும் சில கூட்டங்களை நடத்த வேண்டியுள்ளது..

    மூன்று தடுப்பூசி

    மூன்று தடுப்பூசி

    தடுப்பூசிகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் குழுவான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி) நிலையான தொழில்நுட்ப துணைக்குழு எந்த தடுப்பூசியை தேர்ந்தெடுப்பது குறித்த ஆலோசனைகளை கேட்டுள்ளது. தற்போது, ​​இந்தியாவில் மூன்று பரிசோதனை தடுப்பூசிகள் மனித பரிசோதனைகளுக்கு உள்ளாகியுள்ளது. புனேவை தளமாகக் கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) - ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் 2 மற்றும் 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறது. பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் காடிலா ஆகிய இரண்டு உள்ளூர் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மற்ற இரண்டு தடுப்பூசிகளைவிட ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சோதனையில் முன்னணியில் உள்ளது. பாரத் மற்றும் காடிலா ஆகிய இருநிறுவனங்களும் தற்போது ஆரம்ப கட்டம் 1 மற்றும் 2 மருத்துவ பரிசோதனைகளை செய்து வருகின்றன.

    விரைவில் ஒப்புதல்

    விரைவில் ஒப்புதல்

    ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குறித்து அரசாங்கம் கவனித்து வருகிறது. இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆரம்ப கட்டங்களில் நல்ல பலனை காட்டியுள்ளது - இந்தியாவில் தடுப்பூசி ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி இதுதான். இதற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனினும் உள்நாட்டில் வளர்ந்து வரும் மற்ற இரு சோதனை தடுப்பூசிகளும் வெகு தொலைவில் இல்லை. அவை பாதுகாப்பையும் செயல்திறனையும் வெற்றிகரமாக நிரூபித்தால், ஒழுங்குமுறை விரைவில் கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    English summary
    Govt eyes initial procurement of around 50 lakh doses of Covid-19 vaccine for front-line workers, army personnel and certain other categories of individuals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X