டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்காக நிரந்தர குழு அமைகிறது.. இனி உயர் பதவி வகிக்கலாம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் அவர்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்ற அனுமதி கிடைத்துள்ளது.
எனவே, ராணுவத்தில் மிகப்பெரிய பொறுப்புகளை ஏற்பதற்கான வாய்ப்பு பெண்களுக்கும் கிடைக்கும். இதற்கு வசதியாக, இந்திய ராணுவத்தில், நிரந்தர குழு அமைப்படுகிறது.

Govt sanctions permanent commission to women officers in Indian Army

இப்போது, , ராணுவத்தில் பெண்கள் நீதிபதி, அட்வகேட் ஜெனரல் மற்றும் ராணுவ கல்வித்துறை ஆகியவற்றில் மட்டும் பணிபுரிந்து வரும் நிலையில், இந்த குழு அமைக்கப்படுவதன் மூலம் ராணுவ விமானப்பாதுகாப்பு (AAD), சிக்னல்கள், இன்ஜினியர்கள், ராணுவ விமானப்போக்குவரத்து, மின்னணுவியல் மற்றும் இயந்திர இன்ஜினியர்கள் (EME), ராணுவச் சேவைப்படை (ASC), ராணுவ தளவாடப்படை (AOC) மற்றும் உளவுத்துறை ஆகிய பிரிவுகளோடு தற்போது இருக்கும் நீதிபதி மற்றும் அட்வகேட் ஜெனரல் (JAG) மற்றும் ராணுவக் கல்விப்படை ஆகிய பிரிவுகளிலும் இனி பெண் அதிகாரிகள் தங்களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம்.

இந்திய எல்லையில் சீனா அட்டகாசம்.. அதி நவீன ஆயுதங்களுடன், 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு.. ஷாக்இந்திய எல்லையில் சீனா அட்டகாசம்.. அதி நவீன ஆயுதங்களுடன், 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு.. ஷாக்

இந்திய ராணுவம் இந்திய நாட்டுக்காக சேவை செய்வதில் பெண் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் சம வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதில் உறுதிப்பாட்டுடன் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Govt sanctions permanent commission to women officers in Indian Army

குறுகிய கால பணியில் உள்ள அனைத்து பெண் அதிகாரிகளும் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம் என்ற வாய்ப்பைத் தேர்ந்தெடுத்து, தேவைப்படும் ஆவணங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். இதைத் தொடர்ந்து தேர்வு வாரியத்தின் கால அட்டவணை வெளியிடப்படும்.

கடந்த பிப்ரவரி 17 ம் தேதி இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் மற்றும் கமாண்ட் போஸ்டிங் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அவர்களின் உடல் நிலை ஆண்களை போல இல்லை என்பதால், இதை செயல்படுத்த முடியாது என மத்திய அரசு வாதிட்டது. அதை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

English summary
The Ministry of Defence has issued the formal government sanction letter for grant of Permanent Commission (PC) to Women Officers in the Indian Army, paving the way for empowering Women Officers to shoulder larger roles in the organisation, said Indian Army spokesperson.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X