டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு நிதி உதவி.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

இன்று டெல்லியில் நிதி அமைச்சகம் சார்பாக முக்கிய கூட்டம் நடைபெற்றது. இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சக செயலாளர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Govt will give debt financing for stalled housing projects says Minister Nirmala Sitharaman

அதில், பாதியில் நின்றுபோன கட்டுமான திட்டங்களுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மொத்தம் 1000க்கும் அதிகமான கட்டுமான திட்டங்கள் செயல்படாமல் இருப்பதால் தகவல் வந்துள்ளது. இந்த அறிவிப்பால் 1600 திட்டங்கள் மீண்டும் உயிர்பெறும். ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் அளிக்கவே இந்த அறிவிப்பு.

அயோத்தி தீர்ப்பு.. அமைதியா இருக்கணும்.. யாரும் பேசகூடாது.. கருத்து சொல்லகூடாது.. பாஜக போட்ட கடிவாளம்அயோத்தி தீர்ப்பு.. அமைதியா இருக்கணும்.. யாரும் பேசகூடாது.. கருத்து சொல்லகூடாது.. பாஜக போட்ட கடிவாளம்

இதன் மூலம் முதலீடுகள் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இதனால் அதிக வருமானம் கிடைக்கும். மத்திய அரசு இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதேபோல் எல்ஐசி மற்றும் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து மொத்தமாக இதற்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.

இரண்டு அமைப்பும் இந்த திட்டத்திற்கு ஸ்பான்சர் போல செயல்படும். செபி விதிகளின்படி இதற்கான பணமும் அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது, என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

English summary
Govt will give debt financing for completion of stalled housing projects says Union Finance Minister Nirmala Sitharaman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X