"மொத்தம் 9 வகை ஓமிக்ரான்.." ஒரே வாரத்தில் இரட்டிப்பான கொரோனா கேஸ்கள்.. 4ஆம் அலையின் தொடக்கமா?
டெல்லி: ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர், இந்தியாவில் வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த சூழலில் திடீரென கடந்த வாரம் வைரஸ் பாதிப்பு இரட்டிப்பாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா, உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் கடந்த ஆண்டு வரை 2 அலைகளை ஏற்படுத்தியது.
நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம்! ஆண்டுக்கு இனி 6 முறை கிராம சபை கூட்டங்கள்! முதலமைச்சர் அறிவிப்பு!
இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது. ஓமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்தியது போதிலும், தினசரி பாதிப்பு அப்போது சில லட்சம் வரை சென்றது.

அதிகரிக்கும் கொரோனா
இருப்பினும், டெல்டா கொரோனாவால் ஏற்பட்ட 2ஆம் அலையைப் போல இல்லாமல் 3ஆம் அலையில் வைரஸ் பாதிப்பு குறைவாகவே இருந்தது. இந்நிலையில், தற்போது அது மீண்டும் அக்கிரக்க தொடங்கி உள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. நாடு முழுவதும் கடந்த வாரம் மட்டும் 15,700க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு அதிகமாகும்.

மாநிலங்கள்
நாட்டில் நடந்த 11 வாரங்களாகவே வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரித்துள்ளது. டெல்லி ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் வைரஸ் கேஸ்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தேசிய தலைநகர் பகுதியிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது. அதேபோல கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் கர்நாடகா உட்பட மேலும் ஒன்பது மாநிலங்களிலும் கொரோனா கேஸ்கள் கடந்த வாரம் கணிசமாக அதிகரித்துள்ளது.

எங்கு அதிகம்
தேசிய தலைநகர் பகுதியில் கடந்த வாரம் 6,300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய வாரத்தில் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்பைக் காட்டிலும் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும். குறிப்பாக ஓமிக்ரான் துணை வேறுபாடுகள் தான் தேசிய தலைநகர் பகுதியில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது. ஓமிக்ரான் BA.2.12.1 உள்ளிட்ட மொத்தம் 9 ஓமிக்ரான் வகைகளே வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.

புதிய ஓமிக்ரான் வகைகள்
கடந்த பிப். மாதம் தான் இந்த ஓமிக்ரான் BA.2 வேறுபாடு வழக்கமான ஓமிக்ரானை காட்டிலும் வேகமாகப் பரவும் என்று கூறியது. இருப்பினும், அது ஓரிஜனல் ஓமிக்ரானை காட்டிலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாதது என்றும் உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் போதிலும், உயிரிழப்புகளும் தீவிர பாதிப்பும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்து வருகிறது. இந்தியாவில் கடந்த வாரம் 27 பேர் மட்டுமே கொரோனாவால் பலியாகி இருந்தனர்,

வல்லுநர்கள்
மகாராஷ்டிராவில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு 48% அதிகரித்து இருந்தது. அதேபோல கர்நாடகா மற்றும் மேற்கு வங்காளத்தில் முறையே 71% மற்றும் 66% அதிகரித்துள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களை பொருத்தவரை அது 15,873ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள போதிலும், தற்போதைய சூழலில் இது அடுத்த அலையை ஏற்படுத்துமா என்பதைக் கூற முடியாது என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வேக்சின் பணிகள்
அதேபோல நாட்டில் வேக்சின் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை 187 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இது தவிர நாட்டில் 18+ அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 5-12 வயதினருக்கு வேக்சின் போடும் பணிகளைத் தொடங்கவும் ஆய்வு நடந்து வருகிறது.