டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவிற்கு தொடக்கமே தோல்வி.. யுஎன்எஸ்சியில் காலடி எடுத்து வைத்த இந்தியா.. இனிதான் அதிரடி ஆட்டமே!

Google Oneindia Tamil News

டெல்லி: ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தற்காலிக உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது இந்தியாவின் ராஜாங்க முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    India VS China : UN Security Council-லில் மீண்டும் வெற்றி பெற்ற இந்தியா..சீனாவிற்கு தொடக்கமே தோல்வி

    இந்தியா சீனா இடையே தற்போது லடாக் எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளின் சின்ன சின்ன மூவ் கூட உலக அளவில் கவனம் பெற்று உள்ளது.

    அதிலும் இந்தியா ராஜாங்க ரீதியாக அதிக பலம் வாய்ந்த நாடு ஆகும். உலக அளவில் ராஜாங்க ரீதியாக இந்தியா வல்லரசு நாடுகளுடன் நல்ல உறவை பேணி வருகிறது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி- 8வது முறையாக இடம்ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர் தேர்தலில் இந்தியா வெற்றி- 8வது முறையாக இடம்

    ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    ஐநா பாதுகாப்பு கவுன்சில்

    இந்த நிலையில்தான் சீனாவிற்கு கடிவாளம் போடும் வகையில் இந்தியா ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் சேர முயன்று வந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் என்பது உலகின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு கவுன்சில் ஆகும். இந்த குழுவில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, யூகே , அமெரிக்கா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளது. மற்ற 10 நாடுகள் தற்காலிக உறுப்பினராக 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படும்.

    என்ன உறுப்பினர்

    என்ன உறுப்பினர்

    இதில் இந்தியா தற்போது நிரந்தர உறுப்பினராக இல்லை. தற்காலிகமாக உறுப்பினராக இருந்த இந்தியாவின் பதவிக்காலம் முடிந்தது. இந்த குழுவில் இருப்பது பாதுகாப்பு ரீதியாக, ராஜாங்க ரீதியாக பெரிய பலத்தை கொடுக்கும். இதில் இந்தியா இணைந்தால் ஆசியாவின் இன்னொரு பெரிய நாடான சீனாவிற்கு அது பெரிய சிக்கலாக மாறும். இதில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை சீனா தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

    சீனா எதிர்ப்பு

    சீனா எதிர்ப்பு

    நிரந்தர உறுப்பினர் மட்டும் இல்லை இதில் இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆவதை கூட சீனா விரும்பவில்லை. எங்கே பாதுகாப்பு கவுன்சில் உள்ளே இந்தியா வந்து அப்படியே ராஜாங்க உறவுகளை மேம்படுத்தி நிரந்தர உறுப்பினராகி விடுமோ என்று சீனா அச்சம் தெரிவித்தது. பாகிஸ்தானும் இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதை எதிர்த்து வருகிறது. இந்தியா தற்காலிக உறுப்பினர் கூட ஆக கூடாது என்று இரண்டு நாடுகளும் கடுமையாக எதிர்த்து வருகிறது.

    என்னவெல்லாம் செய்தது

    என்னவெல்லாம் செய்தது

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும் இந்தியாவை சீனா எதிர்த்து வருகிறது. தன்னிடம் இருக்கும் அனைத்து ராஜதந்திரங்களையும் பயன்படுத்தி சீனா எப்படியாவது இந்தியாவை எதிர்க்க பார்த்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சலில் உறுப்பினர்களை தேர்வு செய்ய நேற்று வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பு முன்பு வரை கூட உலக நாடுகளை இந்தியாவிற்கு எதிராக திருப்ப சீனா கடுமையாக முயன்றது.

    சீனாவின் முயற்சி

    சீனாவின் முயற்சி

    இந்தியாவிற்கு எதிராக வாக்குகளை திரட்டி இந்தியாவை தோல்வி அடைய வைக்க சீனா கடுமையாக முயன்றது. ஆனால் இந்தியா தற்போது ஐநாவின் பாதுகாப்பு கவுன்சலில் வெற்றிகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்தலில் இந்தியா வெற்றிபெற்று தற்காலிக உறுப்பினராக ஆகியுள்ளது . 2021-2022 வரை இந்தியா இதில் உறுப்பினராக இருக்கும். இந்தியா 8வது முறையாக இதில் உறுப்பினர் ஆகிறது.

    சீனாவின் தோல்வி

    சீனாவின் தோல்வி

    சீனாவின் பெரும் முயற்சிக்கு இடையிலும் கூட இந்தியா சிறப்பான ஆதரவை பெற்று இதில் உறுப்பினராக ஆகியுள்ளது. 192 நாடுகளில் மொத்தம் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாக வாக்களித்து உள்ளது. இந்தியாவிற்கு எதிராக சீனா மற்றும் பாகிஸ்தானின் பிரச்சாரம் முழுக்க முழுக்க தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு எதிரான ராஜாங்க ரீதியான முயற்சியில் சீனாவின் பெரும் தோல்வியாக இது பார்க்கப்படுகிறது.

     செம சப்போர்ட்

    செம சப்போர்ட்

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தேர்வானதற்கு அமெரிக்கா மிகவும் மகிழ்ச்சியாக ஆதரவு தெரிவித்து வாழ்த்தும் தெரிவித்துள்ளது. அதேபோல் ரஷ்யா, பிரேசில் ஆகிய நாடுகளும் இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.இன்னொரு பக்கம் சீனாவின் நட்பு நாடான கனடா இந்த தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது. இதனால் சீனா தொடர் அதிர்ச்சியை தாங்கி வருகிறது.

    தற்காலிகம்தான்

    தற்காலிகம்தான்

    இந்தியா தற்போது இதில் தற்காலிக உறுப்பினராக ஆகியுள்ளது. வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை சீனா எதிர்த்து வருகிறது. ஆனால் வரும் நாட்களில் இந்தியா பேச்சுவார்த்தைகள் மூலம் இதில் நிரந்தர உறுப்பினராக முயற்சி செய்யும் என்று கூறுகிறார்கள். இதற்கான பணிகளை இந்தியா விரைவில் மேற்கொள்ளும்.

    English summary
    Grabbing a UNSC seat is a big diplomatic victory for India against China amid border tension.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X