டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் செல்வாக்குமிக்க கட்சி எது தெரியுமா?... கருத்துக்கணிப்பு வெளியீடு

Google Oneindia Tamil News

Recommended Video

    Republic Survey:தமிழத்தில் யாருக்கு வெற்றி?

    டெல்லி: 2019 தேர்தலில் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக தேர்தெடுக்க 52.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    மக்களவை தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ள நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில், நியூஸ் 18, பர்ஸ்ட்போஸ்ட் இணைந்து நடத்திய (தி நேஷனல் டிரஸ்ட் சர்வே ) கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    மோடிக்கு ஆதரவு அதிகம்

    மோடிக்கு ஆதரவு அதிகம்

    அதில், 2019 தேர்தலில் பிரதமராக உங்களின் தேர்வு யார்? என்ற கேள்விக்கு 52.8 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கும், 26.9 சதவீதம் பேர் ராகுல்காந்திக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே போல், 4.2 சதவீதம் மம்தா பானர்ஜி வர வேண்டும் என்றும் 2.8 சதவீதம் பேர் மாயாவதிக்கும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    செயல்பாடுகள் நன்று

    செயல்பாடுகள் நன்று

    பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு 36 சதவீதம் பேர் நன்று என்றும், பிரமாதம் என்று 19,1 சதவீதமும் தெரிவித்துள்ளனர். கருத்தில்லை என 4 சதவீதம், மோசம் என 18.7 சதவீதம், சராசரி என 21.4 சதவீதம் என கருத்து தெரிவித்துள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் நன்று என 12.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தமிழக மக்களின் தேர்வு

    தமிழக மக்களின் தேர்வு

    அடுத்த பிரதமராக தமிழக மக்களின் தேர்வு யார்? என்ற கேள்விக்கு 10.6 சதவீதம் நரேந்திர மோடிக்கும் 69.7 சதவீதம் பேர் ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போல், மம்தா பானர்ஜிக்கு 3.2 சதவீதமும், 2.1 சதவீதம் மாயாவதிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் செல்வாக்கு இல்லை

    தமிழகத்தில் செல்வாக்கு இல்லை

    மாநிலக் கட்சிகள் செல்வாக்கு பெற்றுள்ள மாநிலங்கள் என தெலங்கானா, மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த கட்சிக்கும் செல்வாக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக மக்கள் கருத்து

    தமிழக மக்கள் கருத்து

    மக்களவை தேர்தலில் உங்கள் வாக்கு தேசிய ஜனநாயக அணிக்கா அல்லது மகா கூட்டணிக்காக என்பதில் பாஜகவுக்கு 23.7 சதவீதமும், எதிர்க்கட்சிகளுக்கு 76.3 சதவீதமும் தமிழக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சட்டம் ஒழுங்கு

    சட்டம் ஒழுங்கு

    இந்தியாவின் பிரச்சனைகளைக் கையாள்வதில் தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சி எது? என்ற கேள்விக்கு, அதாவது சட்டம், ஒழுங்கை கையாள்வதில் அதிமுகவுக்கு 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போல், திமுகவுக்கு 37 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    English summary
    52.8 percent support for Narendra Modi in the 2019 elections. Opinion poll released by News 18
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X