டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இணைய வேகம் தாறுமாறாக அதிகரிக்கும்.. நாளை மறுநாள் செலுத்தப்படுகிறது ஜிசாட்-11 சாட்டிலைட்!

ஜிசாட்-11 செயற்கைக் கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜிசாட்-11 செயற்கைக் கோள் நாளை மறுநாள் விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இணைய தள சேவை வேகத்தை அதிகரிக்க ஜி சாட்-11 எனும் அதி நவீன செயற்கைக் கோள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.

GSAT11 satellite to launch on Dec 5th

ஆனால் பல்வேறு காரணங்களால் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுவது தள்ளிவைக்கப்பட்டது. தற்போது, 5854 கிலோ எடையில் ஜி சாட்-11 செயற்கைக்கோள் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் முழுமையாக வெற்றி அடையாத நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி சாட்-11 செயற்கைக்கோளில் கூடுதல் கவனம் செலுத்தி உருவாக்கி உள்ளனர்.

ஆனால் இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படவில்லை. இது பிரான்ஸ் எடுத்து செல்லப்படுகிறது.

பிரெஞ்சு கயனாவில் இருந்து ஏரைன்-5 ராக்கெட் மூலம் ஜி சாட்-11 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதன்படி நாளை மறுநாள் அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் விண்ணில் செலுத்தப்படும்.

English summary
ISRO has reported that the launch of the GSAT11 satellite on the 5th will increase the speed of internet service in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X