டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுக்குமாடி வீடு வாங்குவோருக்கு ஒரு நல்ல செய்தி.. ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைகிறது

Google Oneindia Tamil News

டெல்லி: விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அடுத்த அதிரடி ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்புகள் ஜனவரி 10-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் குறிப்பாக கட்டுமான நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைப்படும் என்று தெரிகிறது.

டெல்லியில் டிசம்பர் 22ம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28 சதவீத வரியின் கீழ் உள்ள பல பொருட்களின் வரி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, டிஜிட்டல் கேமிரா, விடியோ கேமிரா உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

வாகனங்களில் 3ம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப் பட்டது.அதே போல, ரூ.100க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. 32 அங்குலம் வரை கொண்ட டிவி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

இந் நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 10ம் தேதி மீண்டும் கூடுகிறது. கூட்டத்தில் அதிகளவு மக்கள் பயன்படும் வகையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. குறிப்பாக கட்டுமான தொழிலை கடுமையாக பாதிக்கும் ஜிஎஸ்டி வரி விகித்தில் மாற்றங்கள் செய்யலாம் என்று அந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

பாதிக்கப்பட்ட கட்டுமான தொழில்

பாதிக்கப்பட்ட கட்டுமான தொழில்

கட்டுமான நிலையில் உள்ள வீடுகளுக்கு தற்போது 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரி விதிப்பு காரணமாக வீடு வாங்கும் நடுத்தர குடும்பங்களும் கடும் சுமையை சந்தித்து வருகின்றன.

ஜிஎஸ்டி வரி குறைக்க வாய்ப்பு

ஜிஎஸ்டி வரி குறைக்க வாய்ப்பு

எனவே வீடு வாங்குவோர் பயனடையவும், கட்டுமான தொழிலுக்கு ஊக்கம் அளிக்கவும் கட்டுமான நிலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சலுகைகளை அளிக்க முடிவு

சலுகைகளை அளிக்க முடிவு

அத்துடன் ஜிஎஸ்டி வரியில் கட்டுமான துறையினருக்கு சில சலுகைகளும் அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு சிறு மற்றும் குறுந்தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
The GST Council is slated to meet on January 10 to discuss lowering GST on under-construction flats and houses to 5 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X