டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்...மாநிலங்கள் முன்பு 2 வாய்ப்பு...ஒரு வாரத்தில் முடிவு!!

Google Oneindia Tamil News

டெல்லி: நடப்பாண்டில் ஏற்பட்டு இருக்கும் அனைத்து ஜிஎஸ்டி இழப்பீடுகளையும் ஆர்பிஐயுடன் ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்கப்படும். மாநிலங்கள் முன்பு இரண்டு வாய்ப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று ஜிஎஸ்டி கூட்டத்திற்குப் பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு ரூ. 2.35 கோடியாக இருக்கிறது. ஜிஎஸ்டி இழப்பீடாக வசூலிக்கப்பட்ட வரி ரூ. 95,444 கோடியாக இருக்கிறது. 2020 நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ .1.65 லட்சம் கோடியை மத்திய அரசு செலுத்தியுள்ளது என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயகுமார் கலந்து கொண்டார்.

GST Council meeting is to be conducted today

ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை ஈடு செய்யும் பொருட்டு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் மாநிலங்களுக்கான வருவாய் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூட்டம் நடந்தது.

ஜிஎஸ்டி இழப்பீடு...பற்றாக்குறை ரூ. 2.35 கோடி...வரி விதிப்பு இல்லை...நிர்மலா சீதாராமன்!!ஜிஎஸ்டி இழப்பீடு...பற்றாக்குறை ரூ. 2.35 கோடி...வரி விதிப்பு இல்லை...நிர்மலா சீதாராமன்!!

இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும் பங்கேற்றார். இந்த ஆண்டு ஜிஎஸ்டி இழப்பீட்டு பற்றாக்குறை ரூ .2.35 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுவதால் ஏற்படும் இழப்பீடு பற்றாக்குறை ரூ .97,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இழப்பீட்டை மத்திய அரசின் பொது நிதியில் இருந்து வழங்க முடியாது என்று நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

English summary
GST Council's 41st meeting to be held in Delhi led by Finance Minister Nirmala Sitharaman through Video Conferencing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X