டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஜராத்தில் கோர விபத்து.. மழையால் வழுக்கி சென்ற பஸ்.. பள்ளத்தில் பாய்ந்ததில் 21 பேர் பலி

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி அருகே 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் 21 பேர் கொல்லப்பட்டனர், 30 பேர் காயமடைந்தனர்.

பலியானவர்களில் நான்கு பேர் குழந்தைகள் என்பது பெரும் சோகம். 14 ஆண்கள் மற்றும் மூன்று பெண்களும் பலியாகியுள்ளனர். காயமடைந்த 30 பேர், பழன்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

Gujarat bus accident: 21 killed, many injuried

அப்பகுதியில் அதிக மழை பெய்ததால் சாலையில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்து குறித்து, பிரதமர் நரேந்திர மோடி வருத்தத்தை தெரிவித்ததோடு, "பனஸ்கந்தாவிடமிருந்து பெரும் மோசமான செய்தி வந்துள்ளது. விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது பற்றி அறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். என் மனது துயரத்திற்கு உள்ளான குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அவர்கள் விரைவில் குணமடையட்டும்" என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி வெளியிட்ட ட்வீட்டில், தேவையான உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

English summary
21 people were killed and 30 injured after a bus carrying over 50 passengers fell into a gorge near Ambaji in Banaskantha district of Gujarat, on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X