டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஜராத் ராஜ்யசபா தேர்தல்: ராஜினாமா அச்சம்.. 65 எம்எல்ஏக்களையும் ரிசார்ட்டில் தங்க வைத்த காங்கிரஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்யசபா தேர்தல் நெருங்கும் நிலையில் குஜராத்தில் ரிசார்ட் அரசியல் ஆரம்பித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது 65 எம்எல்ஏக்களை ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளது.

ஜூன் மாதம் 19ஆம் தேதி குஜராத்தில் ராஜ்யசபா எம்பி தேர்தல் நடைபெறுகிறது. எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் பார்த்தால் பாஜகவுக்கு 3 எம்பிக்கள், காங்கிரசுக்கு இரண்டு எம்பிக்கள் தேர்வாகும் நிலைமை இருந்தது.

Gujarat Congress moves MLAs to resorts ahead of Rajya sabha polls

இந்த நிலையில் அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர். பாஜக இதன் பின்னணியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் எஞ்சியுள்ள 65 எம்எல்ஏக்களை மூன்று குழுக்களாகப் பிரித்து மூன்று வெவ்வேறு ரிசார்ட்களில் இன்று தங்க வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி. தேர்தல் நடைபெறும் வரை இவர்கள் ரிசார்ட்களில் தங்கியிருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் எல்லையில் உள்ள ஒரு ரிசார்ட், ராஜ்கோட் நகரத்தில் உள்ள ரிசார்ட், வதோதரா நகரில் உள்ள ரிசார்ட் என மூன்று ரிசார்ட்கள் இதற்காக புக் செய்யப்பட்டுள்ளன.

திடீரென செருப்பை கழட்டி.. அரசு அதிகாரியை வெளுத்த பாஜக ஸ்டார்.. யார்னு தெரியுதா பாருங்க.. ஷாக் வீடியோதிடீரென செருப்பை கழட்டி.. அரசு அதிகாரியை வெளுத்த பாஜக ஸ்டார்.. யார்னு தெரியுதா பாருங்க.. ஷாக் வீடியோ

காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் அளித்த பேட்டியில், ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் 20 கோடி ரூபாயை தருவதற்கு பாஜக பேரம் பேசியதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். ராஜ்யசபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலின்போதும் கட்சியின் மூத்த தலைவரான அகமது பட்டேலை தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸ் கடும் பாடுபட வேண்டியதாயிற்று. அப்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக வளைத்துப் போட்டது.

கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டனர். டிகே சிவகுமார் தலைமையில் ஆபரேஷன் தாமரை நடக்கவிடாமல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, எப்படியோ ஒரு வழியாக அகமது பட்டேல் வெற்றிபெற வைக்கப்பட்டார்.

English summary
After three of its legislators tendered their resignations within 24 hours, the Congress in Gujarat has been driven under the shield of resort politics yet again. Latest inputs indicate that the Congress has shifted all 65 of its remaining MLAs to a resort.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X