• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இதுவா குஜராத் மாடல்.. கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை மறைப்பு.. கண்ணை கலங்க வைக்கும் கள நிலவரம்

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத்தில், கொரோனா இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்களுக்கும், களத்தில் உள்ள நிலவரத்திற்கும் சம்மந்தமே இல்லாத நிலை காணப்படுகிறது.

சில மாவட்டங்களில், அரசு கொடுக்கும் புள்ளி விவர எண்கள், நிஜத்தைவிட, 20 மடங்கு குறைவாகவே காணப்படுகின்றன.

 டவ்-தெ புயல்.. 23 வருடத்திற்கு பின் 150 கிமீ+ வேகத்தில் காற்று.. குஜராத்திற்கு வெதர்மேன் எச்சரிக்கை! டவ்-தெ புயல்.. 23 வருடத்திற்கு பின் 150 கிமீ+ வேகத்தில் காற்று.. குஜராத்திற்கு வெதர்மேன் எச்சரிக்கை!

அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வதோதரா, ஜாம்நகர், பாவ்நகர் மற்றும் காந்திநகர் போன்ற முக்கிய நகராட்சி நகரங்களில் இறப்பு விவர புள்ளி விவரங்கள் மாறுபட்டு இருப்பதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

உள்ளூர் ஊடகங்கள்

உள்ளூர் ஊடகங்கள்

இந்த நிலையில், கிராமப்புற மாவட்டங்களின் புள்ளிவிவரங்களும் இப்படியாக இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. உடல்களை அடக்கம் செய்யும் இடத்திலிருந்து கிடைத்த தகவல்களை உள்ளூர் மீடியா அம்பலப்படுத்தியுள்ளது. உதாரணமாக, சுரேந்திரநகர் மாவட்டத்தில், 2020 மார்ச் மாதத்தில் 814 இறப்புகளும், 2021 மார்ச் மாதத்தில் 957 இறப்புகளும் நிகழ்ந்தன. 2020 ஏப்ரல் மாதத்தில் 784 இறப்புகள் நிகழ்ந்தன, 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 3,140 என்ற அளவுக்கு இறப்பு பதிவாகியிருந்தது. 2020 மே மாதத்தில், இம் மாவட்டத்தில் 756 இறப்புகள் பதிவாகின. 2021 மே 8 வரை மட்டும் அந்த எண்ணிக்கை 1,739 ஆக இருந்தது.

அரசு எண்ணிக்கை

அரசு எண்ணிக்கை

ஆனால் மே 15 ஆம் தேதி வரை, சுரேந்திரநகர் மாவட்டத்தில் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை 130 ஆக உள்ளது. அதுவும், கடந்த ஆண்டு முதலில் கொரோனா பரவியது முதல் இவ்வளவுதான் இந்த மாவட்டத்தின் இறப்பு எண்ணிக்கை என அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

காங்கிரஸ் குற்றச்சாட்டு

"மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பிற ஏஜென்சிகளிடமிருந்து மாத, வார புள்ளிவிவரங்களை நான் பெற்றுள்ளேன், குஜராத் அரசால் இறப்புகளின் எண்ணிக்கையை எவ்வளவு குறைவாகக் கணக்கிடுகிறது என்பதைக் காண்பிப்பதற்காக அவற்றைத் தொகுத்துள்ளேன்" என்று சுரேந்திரநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சவுசாத் சோலங்கி கூறினார்.

சிறிய ஊர்கள்

சிறிய ஊர்கள்

தரம்பூர் தெற்கு குஜராத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 25,000 மக்கள் தொகையைக் கொண்ட ஊர். ஆனால் உள்ளூர் தகவலை அடிப்படையாக வைத்து வெளியிட்ட ஊடக செய்திப்படி, 2021 ஏப்ரல் 10 முதல் 30 வரை 20 நாட்களில் 265 சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ள, 35 அடக்கம் செய்யப்பட்டுள்ளன. நோய் பரவலை சமாளிக்க எந்தவொரு மருத்துவ வசதியும் இல்லாத கிராமங்களையும் சிறிய நகரங்களையும் கொரோனா இரண்டாவது அலை பெருமளவில் தாக்கியுள்ளது. எனவே, இதுபோன்ற இடங்களில் அதிக இறப்பு விகிதம் உள்ளது என்று ஒரு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிராமங்கள் நிலவரம்

கிராமங்கள் நிலவரம்

"எங்கள் கிராமங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்துள்ளன. டாபி மாவட்டத்தில் மட்டும், 1,500 க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே கொரோனா நோயால் இறந்துவிட்டனர். துரதிர்ஷ்டவசமாக, குஜராத் அரசு அதை அங்கீகரிக்கவில்லை, " என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான டாக்டர் துஷார் சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.

இரு மடங்கு அதிகம்

இரு மடங்கு அதிகம்

கடந்த வெள்ளிக்கிழமை, குஜராத் முன்னணி நாளேடான திவ்யா பாஸ்கரில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. மார்ச் 1 முதல் மே 10 வரை குஜராத்தில் சுமார் 1,23,000 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும், 2020 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் வழங்கப்பட்ட 58,000 இறப்புச் சான்றிதழ் எண்ணிக்கையை ஒப்பிட்டால் இது இரண்டு மடங்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியதால், குஜராத் அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. புள்ளிவிவரங்களில் முரண்பாடு இல்லை என்றும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிகாட்டுதல்களை அரசு பின்பற்றிதான் அறிக்கை வெளியிடுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

English summary
In Gujarat, the corona mortality rate is increasing but the government reports is unrelated with the ground situations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X