டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குஜராத்: சூரத் அருகே நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவுக்கு பதிவானது

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில், நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சூரத் நகரில் இருந்து வடகிழக்கே சுமார் 53 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Gujarat: Earthquake hits near Surat

மாலை 3 மணி 39 நிமிடங்களில் இந்த நிலநடுக்கம் ஆரம்பித்துள்ளது. 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இதன் பரப்பளவு மற்றும் தாக்கம் இருந்துள்ளது.

பீகாரில் ஆட்சி யாருக்கு? சற்று நேரத்தில் வெளியாகிறது எக்சிட் போல் முடிவுகள்பீகாரில் ஆட்சி யாருக்கு? சற்று நேரத்தில் வெளியாகிறது எக்சிட் போல் முடிவுகள்

நிலநடுக்கம் காரணமாக உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகவில்லை. மூன்று வினாடிகள் நீளத்துக்கு இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர முடிந்ததாக சவுத் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். சில பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

அச்சமடைந்துள்ள மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

English summary
Moderate earthquake has been reported in Gujarat's Surat area. Earthquake was of 4.2 magnitude and richter scale and the Epic centre was 53 kilometre North East of Surat sales reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X