டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு தலைவலி கொடுக்கும் போலி என்கவுன்ட்டர்… குஜராத் அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் என்கவுன்ட்டர் கொலைகள் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி பேடி கமிட்டி அறிக்கையை மனுதாரர்களிடம் பகிருமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த காலத்தில் 22 பேர் காவல்துறையால் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டனர். 2002 - 2006 காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த என்கவுன்ட்டர்களுக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

gujarat fake encounter case, apex court warned gujarat government regarding encounter

இதனை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹெச்.எஸ்.பேடி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை முடிவு அடைந்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையை ஹெச்.எஸ்.பேடி தாக்கல் செய்தார்.

மேலும், அந்த அறிக்கை விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், அறிக்கை விவரங்களை யாருக்கும் அளிக்கக் கூடாது என்று குஜராத் அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜனவரி 3வது வாரத்திற்கு ஒத்தி வைத்தது.

English summary
Apex court asks Gujarat government to share Justice Bedi’s report on fake encounters with petitioners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X