• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

டீல் ஓகே..பிகேவுடன் சுமூகம் -காங்கிரஸில் இணையும் நரேஷ் பட்டேல்! சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல் களம்

Google Oneindia Tamil News

டெல்லி : தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில், அவரை பரிந்துரை செய்த குஜராத் லேவா பட்டிதார் சமூக தலைவர் நரேஷ் பட்டேல் விரைவில் காங்கிரஸில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  Congress கட்சியில் இணையும் Prashant Kishore? | Oneindia Tamil

  உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சியினரிடமே அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

  2019 மக்களவைத் தேர்தல் படுதோல்விக்கு பிறகு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட பிளவு, 5 மாநில தேர்தலுக்கு பிறகு பெரிதாக தொடங்கி இருக்கிறது. இது காந்தி குடும்பத்தினருக்கு எதிரான அலையாகவும் உருவெடுத்து இருக்கிறது.

  சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு - தினசரி உயரும் கொரோனாவால் மாணவர்களிடையே அச்சம் சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு 55 ஆக உயர்வு - தினசரி உயரும் கொரோனாவால் மாணவர்களிடையே அச்சம்

  குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்

  குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்

  இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும், தங்கள் தலைமையை தொடர்ந்து தக்க வைக்கவும் காந்தி குடும்பத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தல்.

  ஜிக்னேஷ் மேவானியால் கூடுதல் பலம்

  ஜிக்னேஷ் மேவானியால் கூடுதல் பலம்

  இதற்கான முன்னேற்பாடுகளை கையில் எடுத்திருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி, பட்டியல் சமுதாய தலைவரும் பிரதமர் மோடியின் தொகுதியிலேயே சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வானவருமான ஜிக்னேஷ் மேவானி இம்முறை தங்கள் கட்சியில் இணைத்து இருப்பது கூடுதல் பலத்தை தரும் என நம்புகிறது. தற்போது அசாம் போலீசால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

  நரேஷ் பட்டேல்

  நரேஷ் பட்டேல்

  அதுமட்டுமில்லாமல் அங்கு பெருவாரியாக வசிக்கும் பட்டேல் சமுதாய மக்களின் வாக்குகளை அறுவடை செய்யவும் பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது காங்கிரஸ். ஹர்திக் பட்டேலின் ஆதரவை கடந்து அதன் துணை சாதிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களை கட்சியில் சேர்க்க முயன்று வருகிறது. அதன் வெளிபாடாகவே பிரபல தொழிலதிபரும் லேவா பட்டேல் சமுதாய தலைவருமான நரேஷ் பட்டேலை சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தியது காங்கிரஸ். பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளும் அவரை தன் வசம் இழுக்க முயன்றன.

  நரேஷ் பட்டேலின் ஒற்றை நிபந்தனை

  நரேஷ் பட்டேலின் ஒற்றை நிபந்தனை

  லேவா பட்டிதார் அமைப்பின் தலைவரும் கோடியார் கோவிலை நிர்வகித்து வரும் கோடல்தாம் கோவில் அறக்கட்டளையின் தலைவருமான நரேஷ் பட்டேல் குஜராத்தில் மிகப்பிரபலமான முகமாக அறியப்படுகிறார். இவரை தங்கள் கட்சியில் சேர்த்தால் பாஜகவுக்கு நெருக்கடி தர முடியும் என்பது காங்கிரஸின் நம்பிக்கை. காங்கிரஸின் அழைப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ள நரேஷ் பட்டேல், ஒரு நிபந்தனையை விதித்து இருந்தார்.

  பிரசாந்த் கிஷோர்

  பிரசாந்த் கிஷோர்

  அதுதான், தமிழ்நாடு, மேற்குவங்கத்தைபோல் குஜராத்தில் பிரசாந்த் கிஷோரை வைத்து தேர்தல் வியூகங்களை காங்கிரஸ் வகுக்க வேண்டும் என்பது. பிரஷாந்த் கிஷோரும் குஜராத் காங்கிரஸின் முகமாக பட்டேலை முன்னிறுத்த வேண்டும் என விரும்புவதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தி இல்லம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

  இன்று சோனியாவுடன் சந்திப்பு

  இன்று சோனியாவுடன் சந்திப்பு

  இருதரப்புக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டதால் எப்போது வேண்டுமானாலும் அவர் காங்கிரஸில் இணைவார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து நரேஷ் பட்டேல் காங்கிரஸில் இணைய சம்மதித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று அவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து கட்சியில் இணைவார் என்று பேசப்படுகிறது.

  English summary
  Gujarat patitdar leader Naresh patel likely to join Congress
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X