டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குரு பூர்ணிமா 2020: சூரியன், சந்திரன், உண்மையை மறைக்க முடியாது - ராகுல்காந்தி

குரு பூர்ணிமா கொண்டாடப்படும் இந்தநாளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு குரு பூர்ணிமா, புத்த பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூரியன், சந்திரன் உண்மையை மறைக்க முடியாது என்று ராகுல்காந்தி வாழ்த்

Google Oneindia Tamil News

டெல்லி: குரு பூர்ணிமா கொண்டாடப்படும் இந்தநாளில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு குரு பூர்ணிமா, புத்த பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சூரியன், சந்திரன், உண்மை என உலகத்தில் மூன்று விசயங்களை மறைக்க முடியாது என்று கவுதம புத்தரின் நல்வார்த்தைகளை கூறி குரு பூர்ணிமா வாழ்த்து கூறியுள்ளார் ராகுல்காந்தி.

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் புத்தபூர்ணிமாவாகவும் கடைபிடிக்கப்படுகிறது. புத்தர் துறவறம் பூண்ட பின் சாரநாத் சென்று முதல் முறையாக தனது சிஷ்யர்களுக்கு அருளுரை ஆற்றிய நாள் குரு பூர்ணிமா ஆகும். இதனால் குரு பூர்ணிமா புத்த பூர்ணிமா என அழைக்கப்படுகிறது. புத்த மதத்தை பின்பற்றுவோரால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. புத்த ஆலயங்களில் சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெறுகின்றன.

Guru Poornmia wishes Modi and Rahul Gandhi

பிரதமர் மோடி வாழ்த்து குரு பூர்ணிமா வாழ்த்து

Guru Poornmia wishes Modi and Rahul Gandhi

குரு பூர்ணிமாவை முன்னிட்டு இன்றைய தினம் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த குரு பூர்ணிமா நாளில் நமக்கு அறிவு கொடுத்த நம் குருவை வணங்குவோம். புத்த பூர்ணிமா நாளில் புத்தருக்கு அஞ்சலி செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்! நன்றி நண்பரே.. அமெரிக்க சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த மோடி.. அன்பை கொட்டிய டிரம்ப்!

ராகுல்காந்தி உண்மையை மறைக்க முடியாது

குரு பூர்ணிமா, புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ராகுல்காந்தி வாழ்த்து கூறியுள்ளார். இந்த உலகத்தில் சூரியன், சந்திரன், உண்மையை மறைக்க முடியாது குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Three things that cannot be hidden for long - Sun, Moon and Truth says Gautam buddha Rahul Gandhi wishes Guru Purnima Wishes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X