டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

‛மசூதிபோல் இருக்கே என தோண்டிவிடாதீர்’... இது அணு ஆராய்ச்சி மையம்... பாஜகவை பந்தாடிய பெண் எம்பி

Google Oneindia Tamil News

டெல்லி: தாஜ்மஹால் பற்றி சர்ச்சை கருத்துகள் எழுந்த நிலையில் ஞானபாவி மசூதியில் சிவலிங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மசூதி போல் இருக்கிறதே என பாபா அணு ஆராய்ச்சி மையத்தை தோண்டமாட்டார்கள் என நம்புவோம் என திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மஹிவா மொய்த்ரா எம்பி பாஜகவை கிண்டல் செய்துள்ளார்.

இந்தியாவில் சில ஆண்டுகளாக மத வழிபாட்டு தலங்கள், உலக அதிசயமான தாஜ்மஹால் பற்றி பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றன. இது பெரும் விவாதப்பொருளாகி வருகிறது.

ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ் ராஜிவ் கொலை: அன்றே மன்னித்த ராகுல்.. 3 ஆண்டுகளாகியும் முறுக்கிக்கொண்டு நிற்கும் தமிழக காங்கிரஸ்

இத்தகைய செயல்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கோவில்கள் இருந்த இடத்தில் தான் மசூதிகள், புராதான சின்னங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறி சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

தாஜ்மஹால் சர்ச்சை

தாஜ்மஹால் சர்ச்சை

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உள்ளது. இதுபற்றி பாஜக எம்பி தியாகுமாரி தாஜ்மஹால் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்பிறகு தாஜ்மஹால் ரகசிய அறைகளில் இந்து கடவுள்களின் சிலைகள் உள்ளதாகவும் கூறப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியது.

மசூதிக்குள் சிவலிங்கம்

மசூதிக்குள் சிவலிங்கம்

இந்த வரிசையில் வாரணாசி ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வின்போது மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதவிர மதுராவில் உள்ள மசூதிகள் பற்றியும் சிலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக குதுப்மினார் கோபுரம் குத்புதீன் ஐபக்கால் கட்டப்பட்டது இல்லை என்றும் அது விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது என தொல்லியல் துறை பணியாற்றி ஓய்வு பெற்ற தரம்வீர் சர்மா கூறினார்.

திரிணாமுல் எம்பி கருத்து

திரிணாமுல் எம்பி கருத்து

இந்நிலையில் மசூதிகள் மற்றும் புராதன சின்னங்களை குறிவைத்து இந்தியாவில் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மேலும் இதன்பின்னணியில் பாஜகவினர் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹிவா மொய்த்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

தோண்டமாட்டார்கள் என நம்புவோம்

தோண்டமாட்டார்கள் என நம்புவோம்

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் படத்தை வெளியிட்டுள்ளார். இந்த மையத்தின் மேற்புறம் ‛டூம்' மசூதி போன்று உள்ளது. இதையடுத்து, ‛‛ தோண்டப்படும் பட்டியலில் அடுத்து பாபா அணு ஆராய்ச்சி மையம் இருக்காது என நம்புவோம்'' என குறிப்பிட்டுள்ளார். அதாவது மசூதிகள் தொடர்பான விஷயங்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்யப்பட்டு வரும் இந்த சூழலில் தான் பாபா அணு ஆராய்ச்சி மையத்தை மசூதி என நினைத்து தோண்டமாட்டார்கள் என அவர் கருத்து தெரிவித்துள்ளது. இதன்மூலம் அவர் பாஜகவை கிண்டல் செய்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Recommended Video

    Shivling Found In Gyanwapi Mosque | Gyanvapi மசூதி இந்து கோயிலா? | Oneindia Tamil
    பாஜகவினர் கண்டனம்

    பாஜகவினர் கண்டனம்


    இது தற்போது சர்ச்சையாகி உள்ளது. இந்த பதிவை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை மறைமுகமாக விமர்சனம் செய்து இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தியதாக சிலர் மஹிவா மொய்த்ராவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    The Shivaling located in the Gnanapavi Mosque amid controversy over the Taj Mahal. Trinamool Congress MP Mahua Moitra MP has teased the BJP that, Hope bhabha Atomic Research Centre is not next on the digging list
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X