டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாதி ஹபீஸை வைத்து காஷ்மீருக்கு பதிலடி கொடுக்க பிளான்.. பாக். திட்டத்தால் என்ன நடக்கும்?

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஹபீஸ் முகமது சயித் விடுதலை செய்யப்பட்டால், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Hafiz Saeed : இந்தியாவிற்கு எதிராக பாக். ஷாக் நடவடிக்கை?.. ஹபீஸ் சையது விடுதலை?- வீடியோ

    டெல்லி: ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஹபீஸ் முகமது சயித் விடுதலை செய்யப்பட்டால், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

    ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஹபீஸ் முகமது சயித் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வருகிறது. பாகிஸ்தானில் அவருக்கு எதிராக நிறைய வழக்குகள் நடந்து வருகிறது.

    ஆனால் வழக்குகளுக்கு இடையில் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகிறது. இதனால் காஷ்மீர் எல்லையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    விடுதலை செய்யப்பட்டார் தீவிரவாதி ஹபீஸ் சையது?.. இந்தியாவிற்கு எதிராக பாக். ஷாக் நடவடிக்கை?விடுதலை செய்யப்பட்டார் தீவிரவாதி ஹபீஸ் சையது?.. இந்தியாவிற்கு எதிராக பாக். ஷாக் நடவடிக்கை?

    காஷ்மீர் எல்லை

    காஷ்மீர் எல்லை

    ஹபீஸ் முகமது சயித் விடுதலை செய்யப்பட்டதாக வெளியாகி வரும் தகவல்களால் தற்போது காஷ்மீர் எல்லையில் பரபரப்பு நிலவி வருகிறது. அங்கு ஏற்கனவே இந்திய ராணுவ வீரர்கள் அதிகம் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால் தற்போது கூடுதலாக அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள். பாக் எல்லையிலும் வீரர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

    என்ன தாக்குதல்

    என்ன தாக்குதல்

    இந்தியாவில் பெரு நகரங்களில் இதனால் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹபீஸ் திரும்பி வந்தால் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் மீண்டும் வலிமை அடையும். அப்படி நடந்தால் கண்டிப்பாக ஜெய்ஷ் இ முகமது மீண்டும் இந்தியாவில் தாக்குதல் நடத்தும் என்கிறார்கள்.

    உதவி

    உதவி

    காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் எதுவும் உதவி செய்யவில்லை. முக்கியமான நட்பு நாடான சீனா கூட பாகிஸ்தானுக்கு உதவி செய்யவில்லை. அமெரிக்காவும் இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என்று கூறிவிட்டது. இதனால் பாகிஸ்தான் தலைவர்கள் விரக்தியில் இருக்கிறார்கள்.

    வேண்டாத முடிவு

    வேண்டாத முடிவு

    இதனால், கோபத்தில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவை பழி வாங்க ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை தூண்டிவிட்டு, ஹபீசை விடுதலை செய்து, காரியத்தை முடிக்கலாம் என்று பாகிஸ்தான் நினைக்கிறது என்றும் பேசிக்கொள்கிறார்கள். இதனால் காஷ்மீரில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    Hafiz Saeed release may lead to happen worst things in Kashmir after India removes 370.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X