டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வரலாம்.. அரசு குழு வார்னிங்

Google Oneindia Tamil News

டெல்லி: பிப்ரவரியில் இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று கணித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75 லட்சமாகும். உலக நாடுகளின் பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

Half of Indians may have had coronavirus by next February

எனினும் உச்சம் பெற்ற கொரோனா, செப்டம்பர் மாதம் மத்தியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாள்தோறும் இந்தியாவில் சராசரியாக 61 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் அடங்கிய அரசு குழு கூறுகையில் இந்திய மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டனர். ஆனால் பிப்ரவரி மாதத்தில் இது 50 சதவீதமாக அதிகரிக்கும்.

சென்னையில் 1000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. நிம்மதி பெருமூச்சுவிட்ட தலைநகர்வாசிகள்!சென்னையில் 1000-த்தை விட குறைந்த கொரோனா பாதிப்பு.. நிம்மதி பெருமூச்சுவிட்ட தலைநகர்வாசிகள்!

இந்தியாவுக்கு விடுமுறை காலம் நெருங்கிவிட்டது. அது போல் துர்கா பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளும் நெருங்கிவிட்டன. எனவே மக்கள் புாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிக மக்கள் இருக்கும் இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால் ஒரே மாதத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 26 லட்சம் அதிகரித்துவிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

English summary
Half of Indians may have had coronavirus by next February, government panel estimates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X