டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இதற்கு மட்டும் ஐஎம்பிஎஸ், நிப்ட் ஒர்க் ஆகும்!

Google Oneindia Tamil News

டெல்லி: நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் வங்கியான யெஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் உடனடி பண பரிமாற்ற சேவைகளான NEFT மற்றும் IMPS மூலம் கிரிடிட் கார்டு நிலுவை தொகைகள் மற்றும் பிற வங்கிகளில் உள்ள கடன் ஈஎம்ஐ தொகைகள் ஆகியவற்றை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Yes Bank : என்ன ஆனது? வாடிக்கையாளர்கள் என்ன செய்வது?

    வாராக்கடன் பிரச்சனையால் யெஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. மூலதன நிதி நிதிரட்டும் முயற்சிகள் கைகொடுக்காத காரணத்தால் இந்த வங்கி திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ரிசர்வ் வங்கி யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

    யெஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை தடை விதித்துள்ளது. உயர் கல்வி, மருத்துவ சிகிச்சை, திருமணம் மற்றும் இதர விசேஷங்களுக்கு பணம் தேவைப்பட்டால் ரூ.5லட்சம் வரை எடுதுது கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரியங்கா காந்திக்கு ரூ.2 கோடி கொடுத்த யெஸ் வங்கி ராணா கபூர்.. சர்ச்சைகளுக்கு காங்கிரஸ் கூல் பதில் பிரியங்கா காந்திக்கு ரூ.2 கோடி கொடுத்த யெஸ் வங்கி ராணா கபூர்.. சர்ச்சைகளுக்கு காங்கிரஸ் கூல் பதில்

    கட்டுப்பாடுகள் நீக்கம்

    கட்டுப்பாடுகள் நீக்கம்

    யெஸ் வங்கியை நிர்வகிக்க பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்கனர் பிரசாந்த் குமாரை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது. இவர் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து பேசுகையில், யெஸ் வங்கியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை இந்த வாரமே நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. வரும் 15ம் தேதிக்குள் கட்டுப்பாடுகள் நீங்கிவிடும். அனைத்து சேவைகளையும் கூடிய விரைவில் கொண்டு வர முயற்சித்து வருகிறோம்.

    கேள்விக்கே இடமில்லை

    கேள்விக்கே இடமில்லை

    யெஸ் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கடந்த 7ம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் நிதி நிலையை மறு சீரமைப்பதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. இந்த புதிய வரைவு திட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. பாரத ஸ்டேட் வங்கியுடன் யெஸ் வங்கியை இணைக்கப்படுமா என்ற கேள்விக்கே இடமில்லை. மூல தன நிதியை திரட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே இணைப்பு மேற்கொள்ளப்படுவது வழக்கம்"
    இவ்வாறு கூறினார்.

    பிற வங்கி கடன் தொகைகள்

    பிற வங்கி கடன் தொகைகள்

    இதனிடையே யெஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் உடனடி பண பரிமாற்ற சேவைகளான NEFT மற்றும் IMPS மூலம் பிற வங்கிகளில் உள்ள கடன் ஈஎம்ஐ தொகைகள் ஆகியவற்றை செலுத்தலாம் என யெஸ் வங்கி தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது. அதேநேரம் முழுமையாக சேவைகள் செயல்படவில்லை. அதற்கு 15ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    பணத்தை எடுக்கும் மக்கள்

    பணத்தை எடுக்கும் மக்கள்

    யெஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பணத்தை கடந்த 7ம் தேதி முதல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய அளவில் பணம் வைத்துள்ள பணம் ஒரேடியாக வங்கியில் இருந்து பணத்தை மொத்தமாக எடுத்து வருகிறார்கள். இதுவரை சுமார் 2 லட்சம் கோடிக்கு மேல் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட் பணத்தை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    Customers Can Now Use IMPS, NEFT To Pay Dues : Yes Bank
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X