டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தம்பி சுஜித்! நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி.. எழுந்து வா தங்கமே.. ஹர்பஜன் சிங்

Google Oneindia Tamil News

Recommended Video

    Harbajan tweet about sujith | என் மனதில் என்றும் நீ நிற்பாய் மகனே ! கலங்கிய ஹர்பஜன்

    டெல்லி: தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான தீபாவளி என சுஜித் விரைவில் மீட்கப்பட வேண்டும் என்பது குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் நேற்று முன் தினம் அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 28 அடி ஆழத்தில் இருந்த குழந்தை மணல் சரிந்து விழுந்ததில் 80 அடிக்கும் கீழ் சென்றுவிட்டான் சுஜித்.

    சுஜித்தை மீட்க இன்னும் 3 மணி நேரம் ஆகலாம்.. ஏன் இந்த தாமதம்? 3 முக்கிய காரணங்கள்!சுஜித்தை மீட்க இன்னும் 3 மணி நேரம் ஆகலாம்.. ஏன் இந்த தாமதம்? 3 முக்கிய காரணங்கள்!

    ரிக் இயந்திரம்

    ரிக் இயந்திரம்

    அவனை மீட்க தமிழகமே பிரார்த்தனை செய்து வருகிறது. அரசியல்வாதிகள், தமிழ் திரைப்பட பிரபலங்கள் என சுஜித்தை விரைந்து மீட்க வலியுறுத்தி வருகின்றனர். அவனை மீட்க ரிக் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணிகள் காலை முதல் நடைபெற்று வருகின்றன.

    சுஜித்

    சுஜித்

    இந்த நிலையில் 25 அடி ஆழம் தோண்டிய பிறகு பாறை தென்பட்டதால் குழித்தோண்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் உள்ளிட்டோர் சுஜித் மீண்டு வர ட்வீட் போட்டுள்ளனர்.

    பெற்றோர் வலி

    பெற்றோர் வலி

    அந்த வகையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும், நானும் ஒரு குழந்தையோட தகப்பன் அந்த வகையில என்னால சுர்ஜித் பெற்றோரின் வலியை உணர முடியுது.

    வேதனையோடு தீபாவளி

    அந்த குழந்தை உயிர் பொழச்சு வரணும் உன் தாய்ப்பால்ல வீரம் இருக்கு கண்ணு நிச்சயம் வருவ நீ.தம்பி நீ வந்தாதான் எல்லாருக்கும் உண்மையான #தீபாவளி. எழுந்து வா தங்கமே.வேதனையோடு ஒரு #Diwali2019 என தெரிவித்துள்ளார்.

    English summary
    Cricketer Harbhajan Singh tweet that we have Diwali celebration only when Sujith rescues.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X