டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சைக்குரிய பேச்சு.. விளக்கம் தருமாறு கிரிக்கெட் வீரர் ஹா்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ நோட்டீஸ்

Google Oneindia Tamil News

டெல்லி:தனியார் தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஹா்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில், பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு திரை பிரபலங்கள், கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த நிகழ்ச்சியின் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியாவும், கே.எல். ராகுலும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Hardik pandya apologies for comments on tv show, bcci seeks explanation

அந்த நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா பெண்களை பொருளாக பார்க்கும் கண்ணோட்டத்தில் பதில் கூறியிருந்தார். கேள்வி பதில் சுற்று ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி அவர்களில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என கேட்கப் பட்டது. அதற்கு சிறிதும் தயங்காமல் கே.எல். ராகுலும், ஹர்திக் பாண்டியாவும் கோலியின் பெயரைக் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. ட்விட்டரில் அதிகம் விமா்சிக்கப்பட்டதைத் தொடா்ந்து ஹா்திக் பாண்டியா தனது பதிலுக்காக விளக்கமும், மன்னிப்பும் தெரிவித்து உள்ளார்.

இது தொடா்பாக சமூக வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், "நான் யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை. எனது பதில்கள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்"என்று கூறியிருந்தார்.

'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் நான் கூறிய கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சா்ச்சைக்குரிய கருத்துக் குறித்து ஹா்திக் பாண்டியாவும், அவருடன் சென்ற கே.எல்.ராகுலும் 24 மணி நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவா்களுக்கு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

English summary
Hardik Pandya, KL Rahul issued showcause notice by BCCI over remarks on chat show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X