டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிரா, தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதாக லோக்சபாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற லோக்சபா மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை நடவடிக்கைகள் 1 மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 48 லட்சத்தை தாண்டியது இந்தியாவில் 24 மணிநேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 48 லட்சத்தை தாண்டியது

நீட் குறித்து டிஆர் பாலு

நீட் குறித்து டிஆர் பாலு

பின்னர் சபை கூடியதும் கேள்வி நேரத்தை மத்திய அரசு ஒத்திவைத்ததற்கு எதிராக காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். இதனைத் தொடர்ந்து நீட் தேர்வுகளால் தமிழகத்தில் மாணவர் தற்கொலைகள் அதிகரித்திருப்பது குறித்து திமுக எம்பி டி.ஆர். பாலு சுட்டிக்காட்டினார்.

சீனா ஊடுருவல்- ஆதிர் கோரிக்கை

சீனா ஊடுருவல்- ஆதிர் கோரிக்கை

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பேச எழுந்தார். அப்போது குறுக்கிட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சீனாவின் ஊடுருவல் குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் சபாநாயகர் ஓம்பிரிலா இதனை அனுமதிக்க மறுத்தார்.

மாநிலங்களில் அதிகம்

மாநிலங்களில் அதிகம்

இதன்பின்னர் ஹர்ஷ் வர்தன் தொடர்ந்து பேசியதாவது: மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம், தமிழகம், கர்நாடகா, உபி, டெல்லி, மேற்கு வங்கம், பீகார், தெலுங்கானா, ஒடிஷா, கேரளா மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த மாநிலங்கள் அனைத்திலும் கொரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.

5 மாநிலங்களில் 78% பாதிப்பு

5 மாநிலங்களில் 78% பாதிப்பு

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் 78% மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம், தமிழகம், கர்நாடகாவில்தான் உள்ளன. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. நாடு தழுவிய லாக்டவுன் என்பது மத்திய அரசு மேற்கொண்ட மிகவும் திடமான உறுதியான நடவடிக்கை. இவ்வாறு ஹர்ஷ்வர்தன் கூறினார்.

English summary
Union Health Minister Harsh Vardhan makes a statement on Coronavirus in Loksabha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X