டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஹு" நிர்வாக குழு தலைவராக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதவி ஏற்பு.. அதிரடி.. சீனாவிற்கு சிக்கல்!

உலக சுகாதார மையத்தின் நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதவி ஏற்றுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: உலக சுகாதார மையத்தின் நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதவி ஏற்றுள்ளார்.

உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், தற்போது உலக சுகாதார மையத்தின் பங்களிப்பு இதில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. உலகம் முழுக்க பல நாடுகள் உலக சுகாதார மையத்தின் உதவியை நாடி வருகிறது.

உலக சுகாதார மையம் மீது ஒரு பக்கம் அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. அதேபோல் உலக சுகாதார மையத்திற்கு கொடுக்கப்படும் நிதியை மொத்தமாக நிறுத்த போவதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

 அது எப்படி ஒரு ஆட்டோவில் ஒருவர் மட்டும் போக முடியும்.. ஷேர் ஆட்டோ எப்படி ஓட்றது.. கஸ்தூரி கேள்வி அது எப்படி ஒரு ஆட்டோவில் ஒருவர் மட்டும் போக முடியும்.. ஷேர் ஆட்டோ எப்படி ஓட்றது.. கஸ்தூரி கேள்வி

நிர்வாக குழு தலைவர்

நிர்வாக குழு தலைவர்

இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் நிர்வாக குழு தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதவி ஏற்றுள்ளார்.ஜப்பானின் ஹீரோகமி நகாடானியின் பதவி காலம் முடிந்த நிலையில் ஹர்ஷவர்த்தன் பதவி ஏற்று உள்ளார்.உலக சுகாதார மையத்தில் உள்ள மொத்தம் 194 நாடுகள் இவருக்கு ஆதரவான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது.

எப்படி முடிவு

எப்படி முடிவு

இதையடுத்து இவர் பதவி ஏற்று உள்ளார். கடந்த வருடமே இதற்கான ஏற்பாடுகள் நடந்துவிட்டது. உலக சுகாதார மையத்தின் நிர்வாக தலைவராக இந்தியா அறிவிக்கும் நபரை தேர்வு செய்யலாம் என்று தென் கிழக்கு ஆசிய நாடுகள் முடிவு செய்தது. கடந்த வருடமே இந்த நாடுகள் ஒரு மனதாக இந்த முடிவை எடுத்து இருந்தது.

எத்தனை வருடம்

எத்தனை வருடம்

மொத்தம் மூன்று வருடம் இந்த பதவிக்காலம் இருக்கும். இதில் 1 வருடம் ஹர்ஷவர்த்தன் பதவியில் இருப்பார். அதற்கு அடுத்த வருடங்கள் சுழற்சி முறையில் தென் கிழக்கு நாட்டை சேர்ந்த வேறு சிலர் பதவியில் இருப்பார்கள். இன்று ஹர்ஷவர்த்தன் பதவி ஏற்றுள்ளார் . இது முழு நேர பணி கிடையாது. நிர்வாக குழு தலைவர் ஹர்ஷவர்த்தன், உலக சுகாதார மையத்தின் நிர்வாக மீட்டிங்குகளை நடத்தினால் போதும்.

என்ன முடிவு எடுக்கும்

என்ன முடிவு எடுக்கும்

இந்த குழுவில் மொத்தம் 34 பேர் இருப்பார்கள். பல்வேறு நாட்டை சேர்ந்த உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒரு வருடத்தில் இரண்டு முறை இவர்கள் கூட்டம் போட்டு முக்கிய விஷயங்களை முடிவுகளாக அறிவிப்பார்கள். உலக சுகாதார மையத்தின் கொள்கைகளை வகுக்கும் குழுவாகும் இது. இந்த குழு பரிந்துரை செய்யும் விஷயங்களைத் தான் உலக சுகாதார மையம் செயல்படுத்தும்.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள அமைச்சர் ஹர்ஷவர்த்தன், உலகம் முழுக்க பெரும் வைரஸ் கிருமி பரவி வரும் வேளையில் நான் இந்த பொறுப்பை ஏற்று இருக்கிறேன். அடுத்த 10 வருடங்களுக்கு உலக சுகாதார மையத்திற்கு நிறைய சவால் இருக்கிறது. நாம் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், என்று ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார்.

சீனா சிக்கல்

சீனா சிக்கல்

ஏற்கனவே கொரோனா வைரசின் தோற்றம் குறித்தும் தொடக்க காலத்தில் அந்த வைரஸ் பரவல் எப்படி கையாளப்பட்டது என்பது குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்படும் என்று உலக சுகாதர மையம் தெரிவித்துள்ளது. சீனாவிற்கு இது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தற்போது உலக சுகாதார மையத்தின் நிர்வாக குழு தலைவராக அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதவி ஏற்பது சீனாவிற்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

English summary
Harsh Vardhan takes charge as the new Chairman of WHO's Executive Board amid rise in pandemic cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X