டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி காஷ்மீர் பெண்களை திருணம் செய்து கூட்டி வந்துவிடலாம்.. ஹரியானா முதல்வர் ஷாக் கமெண்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீர் பெண்கள் குறித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்த கருத்து நாடு முழுக்க பெரும் சர்ச்சையையும், கண்டனத்தையும் ஒருங்கே ஈட்டியுள்ளது.

ஹரியானாவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய மனோகர் லால் கட்டார், "ஆண்-பெண் விகிதம் குறைவாக இருப்பதால், பீகாரிலிருந்து மணப்பெண்களை அழைத்து வரலாம் என்று முன்பு பாஜக தலைவர் தன்கர் அடிக்கடி சொல்வார். இப்போது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், இனிமேல் காஷ்மீர் பெண்களை ஹரியானா இளைஞர்கள் திருமணம் செய்ய முடியும் என்று மக்கள் சொல்ல ஆரம்பித்துள்ளனர்" என்றார்.

Haryana CM, Khattars comment on Kashmiri women leads controversy

2014ம் ஆண்டு பாஜக தலைவர் ஓபி தன்கர் பீகார் பெண்கள் பற்றி, இதுபோன்ற கருத்தை தெரிவித்திருந்தார். அதை இப்போது காஷ்மீருடன் ஒப்பிட்டு மனோகர் லால் கட்டார் பேசியுள்ளார்.

முன்னதாக, உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர், தனது கட்சி நிர்வாகிகள், இனிமேல் அழகான காஷ்மீர் பெண்களை திருமணம் செய்துகொள்ள முடியும். முன்பு இப்படி திருமணம் செய்தால், காஷ்மீர் பெண்களுக்கு குடியுரிமை பறிபோகும் நிலை இருந்தது. இனி கிடையாது. உங்களுக்கெல்லாம் இனி அழகான பெண்கள் கிடைப்பார்கள் என்று பேசியிருந்தார்.

இதனிடையே, கட்டார் கருத்துக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஹரியானா முதல்வர் கட்டார், காஷ்மீர் பெண்கள் குறித்து கூறிய கருத்து வெறுக்கத்தக்கது, பலவீனமான, பாதுகாப்பற்ற மற்றும் பரிதாபகரமான மனிதனின் மனதில் ஆண்டுக்கனக்கான ஆர்.எஸ்.எஸ் பயிற்சி என்ன செய்யும் என்பதைத்தான் அவர் கருத்து காட்டுகிறது. பெண்கள் ஆண்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.


அதேநேரம், மனோகர் லால் கட்டார், ராகுல் காந்திக்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், சிதைக்கப்பட்ட செய்திக்கு, உங்களை போன்ற உயரத்தில் உள்ள ஒருவர் கருத்து தெரிவித்திருக்க கூடாது. நான் உண்மையில் சொன்னதின் வீடியோவை இணைத்துள்ளேன். இது உங்களுக்கு மன தெளிவைத் தரும். இவ்வாறு கட்டார் தெரிவித்துள்ளார்.

English summary
SIIMA functions will be held at Qatar for the first time over 200 celebrities from Indian cinema attending the two-day events on 15 and 16 August.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X