டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீர் விவகாரம்.. காங்கிரஸ் நிலைப்பாடு தவறு.. பாஜகவின் நடவடிக்கை சரியானது.. காங்கிரஸ் மூத்த தலைவர்

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்தது வரவேற்கத்தக்கது என்றும் பாஜகவுக்கு பாராட்டுகள் என்றும் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இதற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்து வந்தது.

பாலியல் வழக்கு.. தருண் தேஜ்பால் மனு தள்ளுபடி- 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவுபாலியல் வழக்கு.. தருண் தேஜ்பால் மனு தள்ளுபடி- 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு

370 சட்டப்பிரிவு

370 சட்டப்பிரிவு

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஹரியானா மாநில முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடா காஷ்மீர் விவகாரத்தை வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் ரோத்தக்கில் நடந்த பேரணியில் கூறுகையில் 370 சட்டப்பிரிவு ஜம்மு காஷ்மீரில் நீக்கப்பட்டுவிட்டது.

நிலைப்பாடு

நிலைப்பாடு

இதை என்னுடன் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு தவறானது.

தேசப்பற்று

தேசப்பற்று

தேசப்பற்று, சுயமரியாதை என வரும் போது அதில் எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்கக் கூடாது. தற்போது இருக்கும் காங்கிரஸ் பழைய காங்கிரஸ் போல் இல்லை. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எனது ஆதரவு பாஜகவுக்கு உண்டு. ஆனால் அதை நீக்கிய விதம்தான் தவறு என்றார்.

புதிய கட்சி

புதிய கட்சி

காங்கிரஸ் கட்சியில் புதிய தலைவரை தேர்வு செய்யாதது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாதது உள்ளிட்ட பிரச்சினைகளால் பூபிந்தர் சிங் ஹூடா அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில் அவர் புதிய கட்சியை தொடங்கலாம் என கூறப்படுகிறது. இதனால்தான் ஹூடா பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறார் என்றும் கூறப்படுகிறது.

English summary
Haryana EX CM Bhupinder Singh Hooda supports for the BJP government's move to end special status for Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X