டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கை வெட்டப்பட்டு.. தலைகீழாக தொங்கிய சடலம்..உடம்பெல்லாம் காயங்கள்.. விவசாயிகள் போராட்ட பகுதியில் ஷாக்

கைகள் வெட்டப்பட்ட சடலம் தொங்கவிடப்பட்டிருந்தது

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் குண்டலி எல்லையில், இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. தூக்கில் தொங்கிய அந்த நபரின் கைகள் வெட்டப்பட்டுள்ளது.. உடம்பெல்லாம் காயங்களுடன் அந்த சடலம் தொங்கவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநிலங்களில் விவசாயிகள் பல்வேறு விதமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

3 நாட்களுக்கு.. ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு3 நாட்களுக்கு.. ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

அந்த வகையில், டெல்லி - ஹரியானாவின் சிங்கு எல்லையிலும் விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்... இப்படிப்பட்ட சூழலில்தான் சிங்கு எல்லையில் ஒரு ஷாக் சம்பவம் இன்று நடந்துள்ளது.

 தடுப்பு வேலி

தடுப்பு வேலி

சிங்கு எல்லையில் உள்ள போராட்ட இடத்தில் இளைஞரின் சடலம், அங்கிருந்த பேரிகார்ட் எனப்படும் தடுப்பு வேலியில் தொங்கிய நிலையில் கிடந்தது.. இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிறகு, ஒரு கை வெட்டப்பட்டு, உடல் பேரிகார்டில் தொங்கவிடப்பட்டுள்ளது... இன்று காலை இளைஞனின் சடலம் தொங்குவதை விவசாயிகள் பார்த்து அதிர்ந்து போய், குண்டலி ஸ்டேஷனில் தகவல் தந்துள்ளனர்.. ஏதோ கூர்மையான ஆயுதத்தால் இளைஞனின் உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்பட்டன.

சடலம்

சடலம்

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி சோனிபட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...ஆனால், இந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் கிடையாது என்று விவசாயிகள் அமைப்புகள் மறுப்பு தெரிவித்துள்ளன.. பாஜகதான் இப்படி ஒரு கொடூர கொலை குறித்து விவசாயிகள் மீது குற்றம் சாட்டியுள்ளனர் என்கின்றன.

 குண்டலி போலீஸ்

குண்டலி போலீஸ்

இது குறித்து சோனிபட்டின் டிஎஸ்பி சொல்லும்போது, இன்று காலை 5 மணிக்கு குண்டலி போலீஸ் ஸ்டேஷனுக்கு விவசாயிகள் போராட்டம் நடத்தும் அருகில் ஒருவர் கை, கால்கள் வெட்டி சடலத்தை பேரிகார்டில் தொங்க விடப்பட்டுள்ளதாக தகவல் எங்களுக்கு கிடைத்தது.. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இந்த தகவலும் இதை பற்றி தெரியவில்லை.. எனினும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, விசாரணையும் நடந்து வருகிறது" என்றார்.

 சீக்கிய குழு

சீக்கிய குழு

இதனிடையே, அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டலியில் இளைஞரை கொன்றதாக சீக்கியக் குழுவான நிஹாங்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.. சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக கூறி, அந்த இளைஞரை நிஹாங்ஸ் குழு அடித்து கொன்றதாகவும் செய்திகள் கூறுகின்றன. அவர்கள் இளைஞரை அடித்து கொன்று, உடலை போலீஸ் தடுப்பில் தொங்கவிட்டதாகவும், அதன்பிறகு மணிக்கட்டை வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

English summary
Haryana Kundali area, youth hanged near farmers protest and police investigation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X