டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி... மத்திய அரசு விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி : எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது, எத்தனை சுகாதாரப் பணியாளர்களுக்கு போடப்பட்டுள்ளது என்ற விபரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 துவங்கி நடந்து வருகிறது. மதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் பணி பிப்ரவரி 13 ம் தேதி துவங்க உள்ளது.

Health Ministry Addl Secy explained about covid vaccination for health workers

இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி செய்தியாளர்களை சந்தித்து, இது எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், 2021 பிப்ரவரி 6 ம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரை 56,36,868 பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 52,66,175 பேர், அதாவது 54.7 சதவீதம் பேர் சுகாதாரப்பணியாளர்கள். பிப்ரவரி 2 ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தும் பணியை துவங்க உள்ளோம். இதில் 3,70,693 முன்கள பணியாளர்களுக்கு, அதாவது 4.5 சதவீதம் பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.

கொரோனா தடுப்பூசி... இந்திய மருந்துகளுக்காக காத்திருக்கும் 25 நாடுகள்கொரோனா தடுப்பூசி... இந்திய மருந்துகளுக்காக காத்திருக்கும் 25 நாடுகள்

டாப் 13 மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் மேலான சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இதில் பீகார் 76.6 %, மத்திய பிரதேசம் - 76.1 %, திரிபுரா - 76%, உத்திரகாண்ட் - 71.5 %, மிசோரம் 69.7 %, உத்திர பிரதேசம் - 69 %, கேரளா - 68.1 %, ஒடிசா - 67.6 %, ராஜஸ்தான் - 67.3 %, இமாச்சல பிரதேசம் - 66.8 %, லட்சத்தீவு - 64.5 %, அந்தமான் - 62.9 %, சட்டீஸ்கர் - 60.5 %.

12 மாநிலங்களில் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. அதில், அசாம் - 39.9 %, டெல்லி - 37.1 %, பஞ்சாப் - 33.7 %, ஜம்மு-காஷ்மீர் - 33.6 %, தந்ரா - நகர் ஹவேலி - 31.9 %, லடாக் - 31.7 %, தமிழகம் - 28 %, மேகாலயா - 21.7 %, நாகாலாந்து - 21 %, மணிப்பூர் - 17.4 %, புதுச்சேரி - 13.6 %.
கோவிட் மருத்துவமனைகளில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Health Ministry Addl Secy explained about covid vaccination for health workers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X