டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு

Google Oneindia Tamil News

டெல்லி: நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் தொடர்ந்து மூடப்படும் என்றும் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் மட்டுமே மார்கெட்டுகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் இந்தியா முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. கடந்த 3 மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் மாதந்தோறும் அமல்படுத்தப்படுகிறது.

Health Ministry release SOP for market places

அது போல் புதிய தளர்வுகள் குறித்து மத்திய அரசு வெளியிடுகிறது. அந்தந்த மாநில நிலவரத்தின்படி அந்த தளர்வுகளை அளிப்பதா வேண்டாமா என்பதை மாநில அரசு முடிவு செய்யவேண்டும்.

இந்த நிலையில் மார்க்கெட் திறப்பு குறித்து புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி நோய் கட்டுப்பாடு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் தொடர்ந்து மூடப்படும்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்தமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்

இந்த பகுதிகளுக்கு வெளியே உள்ள மார்க்கெட்டுகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. துணை நோய் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிரது.

அது போல் கொரோனா எளிதில் பரவும் அளவுக்கு பிரச்சினைகளை கொண்ட கடை ஊழியர்களும் பொதுமக்களின் நேரடி தொடர்பில் இருந்து விலகியே இருங்கள். மார்க்கெட் தொடர்பான நெறிமுறைகளை அமல்படுத்துவது குறித்து மார்க்கெட் உரிமையாளர்களை சங்கத்தை சுகாதாரத் துறை தொடர்பு கொள்ளவுள்ளது.

இந்த புதிய நெறிமுறைகள் எந்தெந்த மார்க்கெட்டுகளுக்கு பொருந்தும் என்பதை பார்ப்போம். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள்பட்ட மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஹைபர் மார்க்கெட்டுகள் ஆகியவற்றில் உள்ள மார்க்கெட்டுகள், மார்க்கெட் பகுதிகளில் உள்ள ரெஸ்டாரன்டுகள், அலுவலகங்கள், மத வழிபாட்டு கூடங்கள், பயிற்சி நிறுவனங்கள், யோகா மையம், உடற்பயிற்சி கூடங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகிய பகுதிகளில் ஒரு பகுதியாக இருக்கும் மார்க்கெட்டுகளுக்கும் பொருந்தும்.

English summary
Ministry of Health and Family Welfare releases about the Market places in Containment Zones remain closed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X