டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வட இந்தியாவில் வெப்ப அலைகளின் தாக்கம் நாளை முதல் குறைய வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

Google Oneindia Tamil News

டெல்லி: வட இந்தியாவில் வெப்ப அலைகளின் தாக்கம் நாளை முதல் குறைய வாய்ப்புள்ளதாக அகில இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிவிக்கை:

வெப்ப வளிமண்டல அளவில் கிழக்கு ஆப்கானிஸ்தானிலும் அதையொட்டியுள்ள பாகிஸ்தானிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சுழற்காற்று வீசுவதால் மேற்கத்திய வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Heat Wave likely to abate from tomorrow

வடகிழக்கு ராஜஸ்தானிலும், அண்டைப் பகுதிகளிலும் சுழற்காற்று வீசுகிறது. கீழ்நிலை வெப்ப வளி மண்டல அளவில் வடக்கு வெளிகளில் வடகிழக்கு அலைகள் வீசுகின்றன.

இதன் காரணமாக மேற்கு இமயமலைப் பகுதி ஜம்மு காஷ்மீர், லடாக், கில்ஜித், பால்டிஸ்தான், முசாஃபராபாத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், அதையொட்டியுள்ள வடமேற்கு இந்திய சமவெளிகளில் 28 முதல் 31 மே 2020 வரை பரவலான மழை, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதே காலத்தில் மத்தியப் பிரதேசத்திலும் ஆங்காங்கே மழை, இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கொரோனாவுக்கு பதஞ்சலியின் மருந்தா?.. யார் அனுமதி கொடுத்தது?.. வலுக்கும் எதிர்ப்பு கொரோனாவுக்கு பதஞ்சலியின் மருந்தா?.. யார் அனுமதி கொடுத்தது?.. வலுக்கும் எதிர்ப்பு

மே 28 முதல் 31 மே 2020 வரை மேற்கு இமயமலைப் பகுதி, பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி ஆகிய இடங்களில் ஆங்காங்கே மின்னலுடன் கூடிய இடி, மின்னலுடன் கூடிய மழை ,ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும். மழையுடன் கூடிய காற்று, பலத்த காற்று வீசக்கூடும். மே 28 முதல் 30 மே 2020 வரையிலான காலத்தில் உத்தரப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் புழுதிப்புயல் இடியுடன் கூடிய புயல் மழையுடன் கூடிய காற்று வீசக்கூடும்.

மேலே குறிப்பிட்டுள்ள வானிலை காரணமாக வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் சமவெளிகளில் காணப்படும் வெப்ப அலை மற்றும் கடும் வெப்ப அலை மே 29 முதல் குறையக்கூடும். இவ்வாறு இந்திய வானிலை மையத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
According to the India Meteorological Department, Heat Wave to Severe Heat Wave conditions prevailing over Plains of Northwest and Central India are likely to abate from tomorrow, the 29 May 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X