டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2020 முதல் இந்தியாவை மேலும் பொளந்து கட்ட போகும் வெப்பம்.. மக்கள் இடம் பெயரும் நிலையும் வருமாம்.!

Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த வருடத்தின் துவக்கம் முதலே இந்தியாவில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரிக்கும் என இந்திய வெப்ப மண்டல ஆய்வு மையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஐஐடிஎம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அடுத்த ஆண்டு முதல் நாடு முழுவதும் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என கூறியுள்ளது. இதனால் மக்களின் உடல்நிலையில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது.

Heatwaves will increase in india from next year.. El Nino Modoki will start game in india

நாட்டில் வெப்பம் அதிகரிக்க எல் நினோ மோடோக்கி (El Nino Modoki)காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எல் நினோவில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டது என கூறியுள்ள ஐஐடிஎம், எல் நினோ மோடோக்கி மண்ணில் உள்ள ஈரப்பதத்தை குறைய செய்யும் மேலும் பூமியில் இருந்து வளிமண்டலத்திற்கு வெப்பத்தை கடத்தும் என கூறியுள்ளது.

பேசாம சட்டசபையை கலைச்சுடுங்க... மஜத தலைவரின் பேச்சால் கர்நாடக அரசியலில் பரபரப்பு! பேசாம சட்டசபையை கலைச்சுடுங்க... மஜத தலைவரின் பேச்சால் கர்நாடக அரசியலில் பரபரப்பு!

எல் நினோவின் போது, கிழக்கு பசிபிக் பெருங்கடல் மத்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலை விட சூடாகும். ஆனால் எல் நினோ மோடோக்கியின் போது, பசிபிக் பெருங்கடலின் மத்திய பகுதியானது, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலும் குளிர்ச்சியுடன் மேலும் வெப்பம் அதிகமாகிறது.

இந்தியாவில் எல் நினோ மோடோக்கி நிகழ்வுகள் மூலம் எதிர்கால வெப்ப அலைகளை ஆராய்ச்சி மேற்கொண்டது இதுவே முதல் முறையாகும். மேலும் எல் நினே மோடோக்கி 2020ம் ஆண்டு முதல் முதல் 2064 வரை நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் தென்னிந்திய பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும். வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலர் இடம்பெயரும் நிலையும் ஏற்படலாம். இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம், வெப்பத்தின் அளவு ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

54 அனல் காற்று விகித மாறுபாடுகளை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது. வடமேற்கு மாநிலங்களை பொறுத்தவரை மண்ணின் ஈரப்பதம் முற்றிலும் உலர்ந்து போகும் நிலை ஏற்படும். மண்ணின் ஈரப்பதம் குறைய குறைய வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

English summary
India's Tropical Study Center has released an information that will increase the weight of India from the start of next year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X