டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸ் கட்சிக்கு இப்படி ஒரு நிலைமையா?... மாநிலத் தலைவர்கள் தொடர்ந்து ராஜினாமா

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக தனிபெரும்பான்மையுடன் ஆட்சி சூழலில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் விரக்தியில், கட்சி பொறுப்புகளை துறந்து வருகின்றனர். இதனால், தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மக்களவையில் எதிர்க்கட்சியாகும் தகுதியை கூட பெற முடியாமல் போனதால், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Heavy frustration, Congress State leaders continue to resign

தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால், ராகுலின் ராஜினாமா முடிவுக்கு, சோனியா காந்தி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஒடிசா காங்கிரஸ் கட்சித் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், அமேதி காங். தலைவர் யோகேந்திர மிஸ்ரா, கர்நாடக காங். பிரசாரக் குழு தலைவர் பாட்டில் உள்ளிட்டோர் தங்களது பதவியே ராஜினாமா செய்துள்ளனர்.

ஆமா.. ஏன் இன்னும் சசிகலாவை பார்க்க தினகரன் போகலை! ஆமா.. ஏன் இன்னும் சசிகலாவை பார்க்க தினகரன் போகலை!

இதே போல், மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கட்சி பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 50 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆண்ட கட்சிக்கு, இப்படி நிலைமையா என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

English summary
Lok Sabha Election 2019: Frustration in Congress Party, State Leaders Resign
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X