டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் வரலாறு காணாத வெள்ளம்.. உத்தரகாண்டில் மேகவெடிப்பு... பேய் மழைக்கு 38 பேர் சாவு

Google Oneindia Tamil News

Recommended Video

    Heavy rain in Delhi | டெல்லியில் வரலாறு காணாத வெள்ளம்..உத்தரகாண்டில் மேகவெடிப்பு- வீடியோ

    டெல்லி: டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்ததில் மேகவெடிப்பு ஏற்பட்டதால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வட இந்தியாவில் திங்கள்கிழமை மட்டும் 38 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. பல ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. அங்குள்ள உத்தரகாசி மாவட்டத்தில் மகுடி மற்றும் அரகாட்சி உள்ளிட்ட கிராமங்களில் மழை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை12 ஆக அதிகரித்துள்ளது வெள்ளம் காரணமாக கிராமங்களில் ஏராளமான மக்களை காணவிலலை. அவர்களை தேடும் பணியும் நடக்கிறது.

    heavy rain: Delhi on high alert as Yamuna floods, 38 killed in North India

    இமாச்சல் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாள்களில் பெய்த மழை காரணமாக இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. காங்ரா மாவட்டத்தில் வெள்ளப்போக்கை வேறு பாதைக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் திருப்பி விட்டுள்ளனர். இதேபோல் கதேதார் கிராமத்தில் நிலச்சரிவு காரணமாக ஆங்காங்கே மழை வெள்ளம் தேங்கி ஏரி போல் காணப்டுகறிது.

    ஹரியானா மாநிலம் ஹத்னி குண்ட் பேரேஜில் இருந்து சுமார் 8 லட்சம் கனஅடி தண்ணீர் நேற்று முன்தினம் திறந்துவிடப்பட்டது இதனால் டெல்லியில் யமுனை ஆற்றாங்கரையோரத்தில் இருந்து 24 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. பழைய டெல்லி ரயில்வே பாலத்தை ஒட்டியபடி யமுனை ஆற்றில் வெள்ளம் பாயந்தோடுகிறது. டெல்லியில் யமுனை கரையோர பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணையில் இருந்து 1.43 லட்சம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டது.

    heavy rain: Delhi on high alert as Yamuna floods, 38 killed in North India

    பஞ்சாப் மாநிலம் சட்லஜ் ஆற்றில் கடும் வெள்ளபெருக்கு காரணமாக 45 கிராமங்களைச்சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.அரியானா மாநிலத்தில் யமுனை ஆற்றில் வெள்ளம் உயர்ந்ததால் கர்னால் பகுதியில் தவித்த 9 பேர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

    English summary
    Delhi on high alert as Yamuna floods, 38 killed across North India due to heavy rain
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X