டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா, கர்நாடகத்தில் இடைவிடாமல் கொட்டும் மழை.. பலி எண்ணிக்கை 86-ஆக உயர்வு

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளா, கர்நாடகத்தில் மழை..பலி எண்ணிக்கை 86-ஆக உயர்வு- வீடியோ

    டெல்லி: கேரளம், கர்நாடகத்தில் இடைவிடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை 86-ஆக உயர்ந்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

    Heavy rainfall batters in Kerala, Karnataka

    தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வயநாட்டில் உள்ள மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் தண்ணீர் தேங்கியுள்ளது.

    இதனால் கேரளத்தில் மட்டும் 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்களின் முன்பதிவு தொகையை அடுத்த மாதம் பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அது போல் கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

    கர்நாடகத்தின் சிவமோகா, கர்வார், மங்களூர், உடுப்பி, குடகு, ஹாசன், மைசூரு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் பெய்து வரும் கனமழையால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 86ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் கேரளத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கர்நாடகத்திலும் நேற்று மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    English summary
    Heavy rainfall batters in Kerala, Karnataka. As a result the death toll increased to 86.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X