டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைநகர் டெல்லியில் இரு நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு.. வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    தேனியில் கனமழை..! அணைகளின் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு...!

    டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கனமழை கொட்டியது. இதனால் பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை குறைந்தது.

    மேலும் இந்த கனமழை காரணமாக டெல்லியில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக டெல்லியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை விட, 50 சதவிகிதம் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Heavy rains likely in Delhi for two days.. Weather experts warn

    இந்நிலையில் இம்மாதம் 1-ம் தேதியிலிருந்து 23-ம் தேதி வரை 156.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளின் சராசரி 149.8 மில்லி மீட்டராக உள்ளதாக தனியார் வானிலை ஆய்வு அமைப்பான ஸ்கைமெட் வெதர் நிறுவனம் கூறியுள்ளது.

    ஒட்டு மொத்தமாக பருவமழை தொடங்கியது முதல் அதாவது ஜூன் முதல் 167,7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது, இதன்படி பார்த்தால் 22 சதவீதம் குறைவாக பெய்துள்ளது,

    இந்த ஆண்டு டெல்லியில் கடந்த 22/ம் தேதி மட்டும் 50,2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது, இந்த பருவத்தில் இதுவே மிக அதிகமாகும், இது பற்றி பேசிய வானிலை நிபுணர்கள், டெல்லி மற்றம் தேசிய தலைநகர் மண்டலத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்லியில் கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

    தேசிய தலைநகரில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை அலுவலகம் கணித்ததை அடுத்து டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் டெல்லி, அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியபிரதேசத்தின் வடபகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Heavy rains rained in the capital Delhi last Thursday and Friday. Thus the daytime maximum temperature decreased.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X