டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மக்கள் விஷத்தை சாப்பிட்டு இறக்க நேரிடும்" .. பகீர் டிவீட்.. நிர்மலா சீதாராமன் பதில்!

Google Oneindia Tamil News

Recommended Video

    விஷத்தை சாப்பிட்டு இறக்க நேரிடும்' என்ற டுவிட்டுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில்

    டெல்லி: பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி) ஏற்பட்ட கடுமையான நிதி நெருக்கடியினால் ஏற்பட்ட பின்னடைவுகள் தாக்கியதால் "மக்கள் விஷத்தை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என டுவிட்டரில் ஒருவர் கருத்து பதிவிட்ட நிலையில் அவரை சமாதானம் செய்யும் முயற்சியாக டுவிட்டரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

    பிஎம்சி வங்கி, கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல் பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் 23 ம் தேதி தடை விதித்தது.

    அத்துடன் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.1,000 மட் டுமே எடுக்க அனுமதிக்கப்படுவர்கள் என்றும் அறிவித்தது. இதனால அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் அனைத்து பிஎம்சி வங்கிக் கிளைகளிலும் பெருமளவு குவிந்தனர். தங்களது சேமிப்பு பணம் தங்களுக்கு கிடைக்கால் போய்விடுமோ என்று பெரும் அச்சம் அடைந்தனர்.

    மன்மோகன் சிங் மரியாதைக்குரியவர்... பாகிஸ்தான் அமைச்சர் திடீர் புகழாரம்மன்மோகன் சிங் மரியாதைக்குரியவர்... பாகிஸ்தான் அமைச்சர் திடீர் புகழாரம்

     நெருக்கடியில் வாடிக்கையாளர்கள்

    நெருக்கடியில் வாடிக்கையாளர்கள்

    இந்நிலையில் வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் வரை தங்கள் சேமிப்பில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இது வாடிக்கையாளர்களை ஓரளவு நிம்மதி அடைய வைத்திருக்கும். எனினும் நிறைய பணத்தை முதலீடாக வங்கியில் போட்டவர்கள் திருமணம், மருத்துவ செலவு உள்ளிட்ட அவசர தேவைக்கு பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளனர்,

    தீர்வு வேண்டும்

    இந்நிலையில் பிஎம்சி வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பலர் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காணுமாறு கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். இது தொடர்பாக பிஎம்சி வாடிக்கையாளர் பட் என்பவர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பிய டுவிட் பதிவில், அன்புள்ள மேடம், இதில் புதிதாக எதுவும் இல்லை. விரைவான தீர்வை உங்களிடம் எதிர்பாக்கிறோம். நெருக்கடியை கையாள ஏராளமான வழிகள் உள்ளது. இதை மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் வங்கியிடமிருந்து எதிர்பாக்கிறோம். தவயது செய்து இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில் மக்கள் விஷத்தை சாப்பிட்டு இறக்க நேரிடும் என்று கூறியுள்ளார்.

    எங்க கட்டுப்பாட்டில் வராது

    இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுபோன்ற தீவிரமான விஷயங்களைக் குறிப்பிடவோ / பேசவோ / எழுதவோ கூடாது என்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். பல மாநில கூட்டுறவு நிறுவனங்கள் வங்கிகள் என்று அழைக்கப்பட்டாலும் அவை நிதி அமைச்சகத்தின் கீழ் வராது. ரிசர்வ் வங்கிக்குக்கு அந்த நிறுவனங்கள் கட்டுப்பட்டவை. ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.

    பிஎம்சியில் டெபாசிட்

    மேலும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பிஎம்சி) டெபாசிட் செய்தவர்களுக்காக செய்தி குறிப்பினை pmcbank.com என்ற வலைத்தளத்தில் எப்போது வேண்டுமானாலும் அறிய முடியும். மேலும் குறைகள் தீர்ப்பு மற்றும் விசாரணைகளுக்கு கட்டணமில்லா எண் 1800223993 ஐ அழைக்கலாம் என்று கூறியுள்ளார்.

    English summary
    "help otherwise people are bound to consume poison and die" shock tweet to nirmala sitharaman, she repley that I appeal to you not to mention/speak/write of such extreme things.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X